ஹப் செங் பிஸ்கெட் பாதுகாப்பானது

ஹப் செங் பிஸ்கெட் பாதுகாப்பானது

1 mins read
fa467241-57ef-40ec-b643-1f7f6be08d3b
ஹப் செங்கின் கிரீம் கிராக்கர்ஸ். கோப்புப் படம்: ஹப்செங்/ ஃபேஸ்புக் -

கோலா­லம்­பூர்: ஹப் செங் நிறு­வ­னம், தாங்­கள் தயா­ரிக்­கும் கிரீம் கிராக்­கர்ஸ் பிஸ்கெட் மிக­வும் பாது­காப்­பா­னது என்று உறுதி கூறி­யுள்­ளது.

பிஸ்கெட் தயா­ரிப்­பி­லும் சந்­தைப்­ப­டுத்­து­வ­தி­லும் உள்­ளூர் விதி­மு­றை­க­ளைப் பின்­பற்­று­வ­தா­க­வும் உண­வுத் தரப் பாது­காப்பு நடை­ மு­றை­களைக் கடைப்­பி­டிப்­ப­தா­க­வும் அந்­நி­று­வ­னம் மேலும் தெரி­வித்­தது.

1958லிருந்து சமூ­கப் பொறுப்­பு­டன் உண­வுப் பொருட்­களைத் தயா­ரித்து வரு­கி­றோம். வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தொடர் ஆத­ர­வுக்கு நன்றி தெரி­விக்­கி­றோம் என்று நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் ஹப் செங் குறிப்­பிட்­டது.

ஹப் செங் தயா­ரிப்பு உட்­பட 60 நிறு­வ­னங்­கள் தயா­ரிக்­கும் பிஸ்­கெட்­டு­களில் புற்­று­நோயை ஏற்­ப­டுத்­தும் பொருள் கலந்­தி­ருப்­ப­தாக கடந்த அக்ேடா­பர் 18ஆம் ேததி ஹாங்­காங் பய­னீட்­டா­ளர் மன்­றம் கூறி­யி­ருந்­தது.

இதையடுத்து பிஸ்கெட் தரம் குறித்து ஆய்வு செய்யப்போவதாக மலேசிய சுகாதார அமைச்சு அறி வித்தது. இந்த நிலையில் உணவு பாதுகாப்பானது என்பதை ஹப் செங் மறுவுறுதிப்படுத்தியிருக்கிறது.

ஹாங்காங்கின் பயனீட்டாளர் மன்றம், சீனாவில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை ஆய்வு செய்ததா என்பது குறித்து தகவல் இல்லை.