2050க்குள் கரிம வெளியீட்டை குறைக்க ஆஸ்திரேலியா இலக்கு

கேன்­பெரா: ஆஸ்­தி­ரே­லியா 2050ஆம் ஆண்­டுக்­குள் அதன் கரி­ய­மில வாயு வெளி­யீட்டை முற்றி­லும் துடைத்­தொ­ழிக்க இலக்கு கொண்­டுள்­ள­தாக அறி­வித்­துள்­ளது. இருப்­பி­னும், குறு­கி­ய­கா­லத்­திற்­கு­ரிய உறு­தி­யான இலக்­கு­களுக்கு திட்டம் வகுக்க ஆஸ்­தி­ரே­லியா தன் கடப்­பாட்­டைத் தெரி­விக்க வேண்­டும் என்ற பரு­வ­நிலை ஆர்­வ­லர்­கள் கோரிக்­கைக்கு இட­மளிக்­கத் தவ­றி­யுள்­ளது.

இலக்கு தொடர்­பான நாட்­கள் குறித்து அந்­நாட்­டுப் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் நேற்று தெரி­வித்­தார். எரி­சக்தி பய­னீட்­டா­ளர்­களும் நிறு­வனங்­களும் கரி­ய­மில வாயு வெளி­யீட்­டைக் குறைக்க வேண்­டும் என்ற இலக்கை எட்­டு­வ­தற்கு, கரி­ய­மில வாயு வெளி­யீட்­டைக் குறைக்­கும் வழி­வ­கை­க­ளைக் கையாள வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­டார்.

கிளாஸ்­கோ­வில் அக்­டோ­பர் 31 முதல் நவம்­பர் 12 வரை உலகநாடு­கள் பங்­கேற்­க­வி­ருக்­கும் பரு­வ­நிலை மாநாடு நடை­பெ­று­கிறது. அதில் கலந்­து­கொண்டு, கரிம வெளி­யீடு அற்ற நிலையை உரு­வாக்­கு­வது குறித்த இலக்கை எட்­டு­வ­தற்கு அமெ­ரிக்கா, பிரிட்­டன் ஆகிய நாடு­க­ளு­டன் இணைய ஆஸ்­தி­ரே­லியா மறுப்­புத் தெரி­வித்­தி­ருந்­தது. அத­னை­ய­டுத்து அந்­நா­டு­க­ளின் விமர்­ச­னத்­திற்கு அது ஆளா­னது.

இந்­நி­லை­யில் ஆஸ்­தி­ரே­லியா 2050ஆம் ஆண்­டுக்­குள் கரி­ம­வெளி­யீட்டை முற்­றி­லும் துடைத்­தொ­ழிக்க இலக்கு கொண்­டுள்­ள­தாக அறி­வித்­தி­ருப்­பது ஆஸ்­தி­ரே­லியா மீதான விமர்­ச­னங்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைத்­துள்­ளது.

வரும் 2022ஆம் ஆண்டு மே மாதம் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் பொதுத்­தேர்­தலை எதிர்­கொள்­ள­வி­ருக்­கிறார் மோரி­சன். இந்­நி­லை­யில், அங்கு கரிம வெளி­யீட்­டைக் குறைக்­கும் கட்­டுப்­பா­டு­களை அமல்­ப­டுத்­து­வ­தன் மூலம், அங்­குள்ள நிறு­வ­னங்­கள், வேலை­கள் இவற்­றுக்கு ஏதே­னும் அச்­சு­றுத்­தல் ஏற்­ப­ட­லாம் என அவர் கரு­து­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அதி­க­ளவு பசுமை இல்ல வாயுக்­க­ளைக் கொண்­டி­ருக்­கும் நாடு­களில் ஆஸ்­தி­ரே­லி­யா­வும் ஒன்று. நிலக்­கரி சார்ந்த பொருட்­க­ளின் முக்­கிய ஏற்­று­ம­தி­யா­ள­ராக ஆஸ்­தி­ரே­லியா உள்­ளது. நவீன தொழில்­நுட்­பத்­தின் உத­வி­யால் கரிம வெளி­யீட்டை முழு­மை­யா­கக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்­கம் A$20 பில்­லி­யன் முத­லீடு செய்­துள்­ளது.

எனவே, 2050க்குள் கரிம வெளி­யீ­டற்ற நிலையை உரு­வாக்­கும் இலக்கு கொண்­டி­ருக்­கும் ஆஸ்­தி­ரே­லியா 2030ஆம் ஆண்­டுக்­குள் 30 முதல் 35 விழுக்­காடு கரிம வெளி­யீட்­டைக் குறைத்துவிடும் என்று பிர­த­மர் மோரி­சன் கூறி­னார்.

இதற்­கி­டையே, ஆஸ்­தி­ரே­லி­யா­வின் வடக்கே டொரெஸ் நீரி­ணைத் தீவு­களைச் சேர்ந்த மக்கள், அர­சாங்­கத்­திற்கு எதி­ராக வழக்கு தொடுத்­துள்­ள­னர். தங்­கள் வீடு­க­ளைப் பரு­வ­நிலை மாற்­றத்­திலி­ருந்து பாது­காக்க அர­சாங்­கம் தவ­றி­விட்­ட­தாக அவர்­கள் குற்­றம் சாட்­டி­யுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!