சிட்னி: தனது குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கான பயணத் தடையை ஆஸ்திரேலியா நீக்கவுள்ளது. திறன்பெற்ற ஊழியர்களுக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கும் ஆண்டிறுதிக்குள் எல்லைகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா அதன் எல்லைகளை மூடி 18 மாதங்களுக்கு மேலாகிவிட்டன. முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட அதன் குடிமக்கள் வெளிநாடு செல்ல இனி அனுமதி கோரத் தேவையில்லை என்று அரசாங்கம் இன்று புதன்கிழமை (அக்டோபர் 27) அறிவித்தது.
வெளிநாட்டுப் பயணங்கள் என வரும்போது, தற்போது ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் கேரன் ஆன்ட்ரூஸ் கூறினார். குடிமக்கள் அல்லாதோர் உட்பட மற்ற பிரிவினருக்கு பயணக் கட்டுப்பாடுகள் பிறகு தளர்த்தப்படும் என்று அவர் சொன்னார்.