கொவிட்-19: பெய்ஜிங்கில் எட்டு மாதங்களில் இல்லாத புதிய உச்சம்
பெய்ஜிங்: சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் கொவிட்-19 கிருமிப் பரவல், எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக மோசமாகியுள்ளது. வடக்கு மாகாணங்களிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளால் கிருமிப் பரவல் மோசமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நாட்டை வலம்வரும் பயணிகள், உடல்நலம் இல்லையென்றாலும் வீட்டில் முடங்காத நோயாளிகள் போன்றோரால் அதிகத் தொற்று ஆற்றல் கொண்ட உருமாறிய 'டெல்டா' கிருமி மேலும் வீரியத்துடன் பரவிவருவதாகக் கூறப்படுகிறது.
உலக சுகாதாரக் கூட்டத்தில் துணைத் தலைவராக கைரி
பெட்டாலிங் ஜெயா: உலக சுகாதார நிறுவனத்தின் 75வது உலக சுகாதாரக் கூட்டத்தின் துணைத் தலைவராக மலேசியாவின் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஜெனீவாவில் மே 22 முதல் 28 வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்துக்குத் துணைத் தலைவராக திரு கைரி தேர்ந்தெடுக்கப்பட்டது, மலேசியாவுக்குக் கிடைத்துள்ள மிக உயரிய மரியாதை என்று சுகாதார பொது இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா டுவிட்டரில் குறிப்பிட்டார்.
குளிர்கால ஒலிம்பிக்ஸ் 2022: கட்டுப்பாடுகளுக்கு உட்படவும்
பெய்ஜிங்: பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக்சில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர்கள், சீனா விதித்துள்ள கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு உட்படாவிட்டால் கடுமையான தண்டனைக்கு ஆளாவர் என்றும் விளையாட்டுகளிலிருந்து வெளியேற்றப்படலாம் என்றும் சீன அதிகாரிகள் நேற்று எச்சரிக்கை தொனிக்கும் வகையில் தெரிவித்தனர்.

