சகோதரனின் சடலத்துடன் ஓராண்டாக வாழ்ந்த சிறார்கள்

வாஷிங்­டன்: ஓராண்­டுக்கு முன் மாண்ட தங்­க­ளின் தம்­பி­யின் சட­லத்­து­டன் மூன்று சகோ­த­ரர்­கள், ஹூஸ்­டன் வீடு ஒன்­றில் வசித்து வந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. எட்டு வய­தாக இருந்­த­போது சிறு­வனை அவன் தாயா­ரின் காத­லன் கொன்­று­விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சிறார்­கள் பல மாதங்­க­ளாக தங்­க­ளின் அண்­டை­வீட்­டா­ரி­ட­மிருந்து உணவு பெற்­று­வந்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

நினைத்­துப் பார்க்க முடி­யாத அள­வுக்­குப் பிள்­ளை­கள், துயர நிலை­யில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக செய்­தி­யா­ளர் கூட்­டத்­தின்­போது தெரி­விக்­கப்­பட்­டது.

சகோ­த­ரர்­களில் ஆக மூத்­த­வ­ரான 15 வயது சிறு­வன், தம்­மு­டைய 10 மற்­றும் 7 வயது சகோ­த­ரர்­களைப் பார்த்­துக்­கொள்ள முயற்சி செய்­த­போ­தும் ஊட்­டச்­சத்து குறை­பாடுள்ள நிலை­யில் பிள்­ளை­கள் இருந்­த­தா­க­வும் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளான அறி­கு­றி­கள் அவர்­க­ளின் உட­லில் காணப்­பட்­ட­தா­க­வும் அதி­கா­ரி­கள் கூறி­னர்.

இதன் தொடர்­பில் பிள்­ளை­களின் தாயா­ரான 35 வயது குலோ­ரியா வில்­லி­யம்ஸ், தாயா­ரின் காத­ல­னான 31 வயது பிரை­யன் குல்­டர் மீது குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது.

உயி­ரு­டன் மீட்­கப்­பட்ட மூன்று சிறார்­களும் தற்­போது குடும்ப, பாது­காப்­புச் சேவை­கள் பிரி­வில் உள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!