கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ராசாக் போட்டியிடக்கூடும் என்ற கருத்தை இருமுறை பிரதமராக இருந்துள்ள மகாதீர் முகம்மது நேற்று தம் வலைப்பதிவில் முன்வைத்தார்.
நஜிப்புக்கு எதிரான பல குற்றவியல் வழக்குகள், நீதிமன்றத்திற்கு வர வெகுநாட்கள் ஆவதாகவும் திரு மகாதீர் குறிப்பிட்டார். அடுத்த தேர்தல் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டும். அடுத்த ஆண்டுகூட அது நடக்கலாம்.
இந்நிலையில், அடுத்த பொதுத் தேர்தலில் நஜிப் போட்டியிடக்கூடும் என்று திரு மகாதீர் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த ஆண்டு '1எம்டிபி' நிதி மோசடி வழக்கில் நஜிப்புக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

