இந்து சமயத்தைத் தழுவினார் சுகர்னோவின் மகள் சுக்மாவதி

1 mins read
01a04144-12eb-4317-90cd-f9ae66b3ce47
இந்து சமயத்தை 'சுதி வதனி' சடங்கு மூலம் அதிகார பூர்வமாகத் தழுவிய சுகர்னோ மகள் சுக்மாவதி. படம்: சிஎன்என் இந்தோனீசியா -

டென்­ப­சார்: இந்­தோ­னீ­சி­யா­வின் முதல் அதி­ப­ரான சுகர்­னோவின் மக­ளான சுக்­மா­வதி சுகர்­னோ­புத்­ரி, இஸ்­லா­மிய சம­யத்­தி­லி­ருந்து இந்து சம­யத்­திற்கு அதி­கா­ர­பூர்­வ­மாக நேற்று முன்­தி­னம் மாறி­ய­தாக சிஎன்­என் இந்­தோ­னீ­சியா தெரி­வித்­தது. சம­யம் மாறு­வ­தற்­கான சடங்­கு­கள் திங்­கட்­கி­ழ­மை­யன்று தொடங்கி, நேற்று முன்­தி­னம் முடி­வுற்­றது. சுக்­மா­வ­தி­யின் 70வது பிறந்­த­நாளு­ட­னும் சடங்கு விழா­வும் சேர்ந்து நடந்து உள்­ள­தா­கக் கூறப்­பட்­டது.

'சுதி வதனி' என்ற சடங்கை சுக்­மா­வதி பூர்த்தி செய்­தது, அவர் இந்து சம­யத்­திற்கு அதி­கா­ர­பூர்­வ­மாக மாறி­விட்­ட­தைக் குறிக்­கும். சம­யம் மாறும் சடங்­குக்கு முன்­ன­தாக சுக்­மா­வதி தம்­மு­டைய சகோ­தரி மேகாவ­தி­யி­ட­மி­ருந்து ஆசீர்­வா­தம் பெற்­றுக்­கொண்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

பாலி­யைச் சேர்ந்த தம்­மு­டைய பாட்­டி­யால் இந்து சம­யத்­திற்கு மாறும் முடிவை சுக்­மா­வதி எடுத்­தார். சகோ­த­ரர்­களும் பிள்­ளை­களும் இவ­ரது முடிவை ஏற்­றுக்­கொண்டு ஆத­ர­வும் தந்­துள்­ள­தாக அறி­யப்­ப­டு­கிறது.