தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேன்சிட்டி ஆதிக்கத்தை முறியடித்தது வெஸ்ட்ஹேம்

1 mins read
0a763b08-dcee-498b-a3d2-81ca30ed100e
-

லண்­டன்: நான்கு ஆண்டு கால­மாக இங்­கி­லிஷ் லீக் கிண்­ணத்தை வெற்­றி­யா­ள­ராக இருந்து வந்த மான்­செஸ்­டர் சிட்டி குழு­வின் ஆதிக்­கத்தை ஒரு முடி­வுக்­குக் கொண்டு வந்­துள்­ளது வெஸ்ட்­ஹேம் குழு.

அவ்­விரு குழுக்­களும் ஆட்ட முடி­வில் எந்­த­வொரு கோலும் போடா­மல் இருந்­த­தால், வெற்­றி­யா­ளரை நிர்­ண­யிக்க தரப்­புக்கு ஐந்து பெனால்டி வாய்ப்­பு­கள் வழங்­கப்­பட்­டன. அதில் வெஸ்ட்­ஹேம் 5-3 என்ற கோல் கணக்­கில் வெற்றி பெற்று காலி­று­திச் சுற்­றுக்கு முன்­னே­றி­யது.

லீக் கிண்­ணப் போட்டி­களில் அடுத்த சுற்­றுக்கு லிவர்­பூல், டோட்­டன்­ஹம் குழுக்­களும் காலி­று­திச் சுற்­றுக்கு தகுதி பெற்­றன.

லிவர்பூல் 2-0 என்ற கோல் கணக்கில் பிரஸ்டன் குழுவை வீழ்த்தியது.

டோட்­டன்­ஹம் ஹாட்ஸ்பர் குழு 1-0 என்ற கோல் கணக்கில் பெர்ன்லி குழுவைத் தோற்கடித்து காலி­று­திச் சுற்­றுக்கு முன்னேறியது. ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் தனது குழுவின் வெற்றி கோலைப் போட்டார் லுக்கஸ் மோரா.