தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இருபாலாரும் அணியக்கூடிய உலகின் முதல் 'காப்புறை'

1 mins read
c37280a8-7798-4d0e-b3a9-5511cacbf46c
-

சிபு: உற­வு­கொள்­ளும்­போது ஆணோ பெண்ணோ அணிந்­து­கொள்­ளக்­கூ­டிய காப்­பு­றையை உல­கி­லேயே முதன்­மு­த­லாக உரு­வாக்கி இருக்­கி­றார் மலே­சி­யா­வைச் சேர்ந்த மகப்­பேற்று மருத்­து­வர் ஒரு­வர். 'வொண்­ட­லீஃப் யூனி­செக்ஸ் கோண்­டோம்' எனப் பெய­ரி­டப்­பட்­டுள்ள அந்­தக் காப்­புறை, பாலி­யல் நலத்­தைச் சிறப்­பா­கப் பேண இரு­பா­லார்க்­கும் உத­வும் என்­கி­றார் அதன் கண்­டு­பி­டிப்­பா­ள­ரான டாக்­டர் ஜான் டாங் இங் சின். "அடிப்­ப­டை­யில், மேற்­ப­ரப்­பில் ஒட்­டுப்­ப­சை­யு­டன் கூடிய வழக்­க­மான காப்­பு­றை­தான் இது," என்­றார்' 'டுவின் கேட்­ட­லிஸ்ட்' எனும் மருந்­துப்­பொ­ருள் விநி­யோக நிறு­வ­னத்­தைச் சேர்ந்த டாக்­டர் டாங்.

அது பெண்­ணு­றுப்­பில் அல்­லது ஆணு­றுப்­பில் ஒட்­டிக்­கொள்­வ­து­டன் கூடு­தல் பாது­காப்­பை­யும் வழங்­கும் என்று அவர் சொன்­னார்.

காப்­பு­றை­யின் ஒரு­பக்­கம் மட்­டுமே அந்த ஒட்­டுப்­பசை இருக்­கும் என்­ப­தால், அதை உள் அல்­லது வெளிப்­பக்­க­மா­கத் திருப்பி ஆணோ பெண்ணோ பயன்­ப­டுத்­த­லாம்.

இரு காப்­பு­றை­கள் கொண்ட ஒரு பெட்­டி­யின் விலை S$4.87.

மலேசியாவில் 12 காப்புறைகளின் விலை 20 முதல் 40 ரிங்கிட்.

டிசம்பர் மாதத்தில் இருந்து டுவின் கேட்டலிஸ்ட் நிறுவனத்தின் இணையத்தளம் வாயிலாக அவற்றை வாங்க முடியும் என்று டாக்டர் டாங் தெரிவித்துள்ளார்.