மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் ஆகப்பெரிய நகரங்களில் ஒன்றான மெல்பர்ன், கிருமிப் பரவல் காரணமாக கடந்த ஒன்பது மாதமாக முடக்கப்பட்டிருந்தது. இதனால் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை.
கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த நிைலயில் பல மாதங்களுக்குப் பிறகு பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் அடைந்துகிடந்த மக்கள் உற்சாகத்துடன் கடைகளுக்கும் மதுபானக் கூடங்களுக்கும் படைெயடுத்துள்ளனர். ஏறக்குறைய எல்லா கடைகளிலும் மக்கள் வரிசையில் காத்திருக்கும் அளவுக்கு கூட்டம் கூடியது. மதுபானக் கூடங்களில் உற்சாக பானம் கரைபுரண்டு ஓடுகிறது. ஐந்து மில்லியன் மக்கள் வசிக்கும் அந்நகரம், ஆறாவது முடக்கத்திற்குப் பிறகு கடந்த வாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. மெல்பர்ன் மட்டுமல்லாமல் விக்டோரியா முழுவதும் எண்பது விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டு உள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் விக்டோரியாவில் 1,355 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது, இம்மாதம் பதிவான மிகக் குறைவான தொற்றுச் சம்பவங்களாகும். 11 பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். ஆனால் தடுப்பூசி போடாததால் உடல்நிலை மோச மாக பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
"இதற்கிைடயே இருபது வயதுகளில் இருப்போர் உடனே சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்களை தொற்றிலிருந்து பாதுகாக்கும்," என்று விக்டோரியா கொவிட்-19 தடுப்பு நடவடிக்கை அதிகாரி ஜெரோயின் வெய்மார் அறைகூவல் விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியா முழுவதையும் எடுத்துக் கொண்டால், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 236 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவர் மரணமடைந்தனர்.
அண்டை நாடான நியூசிலாந்தில் புதிதாக 160 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் ஆக்லாந்து நகரைச் சேர்ந்தவர்கள். 'டெல்டா' கிருமிக்கு எதிராக நியூ சிலாந்து போராடி வருகிறது.

