பிலிப்பீன்சில் செய்தியாளர் கொலை

பிலிப்பீன்சில் செய்தியாளர் கொலை

1 mins read
de4692b9-4bdb-4033-bd77-76a6c477192e
-

பிலிப்பீன்ஸ் செய்தியாளர் தமது வீட்டில் பலமுறை தாக்கப்பட்டதை அடுத்து அவர் இறந்ததாக போலிசார் ஞாயிற்றுக்கிழமை காலை தெரிவித்தனர். அந்நாட்டில் ஏற்கெனவே செய்தியாளர்கள் பலர் கொல்லப்பட்டதை அடுத்து இந்தச் சம்பவம் நடந்திருப்பதாக போலிசார் தெரிவித்தனர்.

உலகிலேயே செய்தியாளர்களுக்கு ஆக ஆபத்தான நாடுகளில் ஒன்றாக இருக்கும் பிலிப்பீன்சில் இவர்களைக் கொல்வோரில் பெரும்பாலானோர் தண்டனையின்றித் தப்பிக்கின்றனர்.

நியூஸ்லைன் பிலிப்பீன்ஸ் ஊடக நிறுவனத்தையும் எனர்ஜி எப்எம் நிறுவனத்தையும் சேர்ந்த திரு ஓர்லாண்டோ டினோய், துப்பக்கிக்காரன் ஒருவரால் ஆறு முறை சுடப்பட்டதாக மிண்டானோ தீவைச் சேர்ந்த போலிசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் திரு டினோய் உடனே இறந்ததாக போலிசார் தெரிவித்தனர். விசாரணை தொடர்கிறது.