அதிக அளவில் படம் எடுக்கப்பட்ட 'மெட்டர்ஹார்ன்' மலை

அதிக அளவில் படம் எடுக்கப்பட்ட 'மெட்டர்ஹார்ன்' மலை

1 mins read
df4c3d2f-1561-4ee8-ae73-a55291be2ac9
-
Google News Preferred Icon

'மெட்டர்ஹார்ன்' (Matterhorn) என்ற இந்த மலை உலகிலேயே ஆக அதிக முறை புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. புலால் உண்ணும் விலங்கின் பல்லின் வடிவத்தைக் கொண்டுள்ள இந்தப் பனிமலைக்கு நுழைவாயிலாகத் திகழ்வது செர்மெட் என்ற ஊர். 5,600 பேர் வாழும் இந்த ஊரை உலகெங்கிலும் உள்ள பனிச்சறுக்குப் பிரியர்கள் நாடுவர்.

13ஆம் நூற்றாண்டில் ப்ராட்டோ போர்னோ என்ற பெயரால் அப்போது அழைக்கப்பட்ட கிராமத்தில் ஆயர்களும் விவசாயிகளும் வாழ்ந்தனர். 1865ஆம் ஆண்டுக்குப்பிறகு இந்த இடம் தற்போது நம் கண்களுக்குப் புலப்படும் நகரமாக மாறியுள்ளது.