ரோம்: ஜி-20 உலகத் தலைவர்கள் மாநாடு நடைபெறும் இத்தாலியின் ரோம் நகரில் ஆயிரக்
கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்ட முழக்கம் எழுப்பினர். பருவநிலை மாற்றத்திற்கு எதிராக விரைந்து செயல்படவும் கொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் நியாயத்தைக் கடைப்
பிடிக்கவும் வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை பருவநிலை ஆர்வலர்கள் முன்னின்று நடத்தினர்.

