மணிலா: பிலிப்பீன்ஸில் செய்தி யாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒர்லாண்டோ டினோய் எனப்படும் அவர் மிண்டனாவ் தீவிலுள்ள தமது வீட்டில் இருந்தபோது துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் வீட்டுக்குள் நுழைந்து அவரை நோக்கி ஆறு முறை சுட்டதாக
போலிசார் கூறினர். உயிரிழந்த ஒர்லாண்டோ 'நியூஸ்லைன் பிலிப்பீன்ஸ்' செய்தித்தளத்திற்காக வேலை செய்து வந்தார்.

