தோக்கியோ: ஜப்பானின் நாடாளுமன்றக் கீழவைக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு இடையில் ஏராளமான மக்கள் வாக்களித்தனர்.
இம்மாதம் பிரதமர் பொறுப்பை ஏற்ற ஃபுமியோ கிஷிடாவுக்கும் அவரது சுதந்திர ஜனநாயக் கட்சிக்கும் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்
படுகிறது.
தம் மீது மக்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதைச் சோதித்துப் பார்க்க தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார் திரு கிஷடா.
இவரது அரசாங்கத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா அல்லது நிராகரிப்பார்களா என்பது வாக்கு எண்ணிக்கையில் தெரிந்துவிடும். ஆதரவு குறைந்தால் உலகின் மூன்றாவது பொருளியல் நாடான ஜப்பானில் நிலையற்ற அரசியல் நிலவரம் உருவாகும் சாத்தியம் உள்ளது. 465 உறுப்பினர்களைக் கொண்ட ஜப்பானிய நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பலம்பெற 233 இடங்களில் வெற்றி பெறவேண்டும். ஆளும் சுதந்திர ஜனநாயகக் கட்சி வசம் 276 உறுப்பினர்கள் உள்ளனர். தேர்தலுக்குப் பின்னர் இந்த எண்ணிக்கை குறையக்
கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

