ஆஸ்திரேலியா-நியூசிலாந்து தடையற்ற பயணம்

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து தடையற்ற பயணம்

1 mins read
bb9e9271-6cf0-4571-8afd-394062758112
-

மெல்­பர்ன்: ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­கும் நியூ­சி­லாந்­துக்­கும் இடை­யில் தனித்­தி­ருக்­கும் கட்­டுப்­பா­டற்ற பய­ணம் இன்று (நவம்­பர் 1) முதல் தொடங்­கும் என ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சுற்­றுப்­ப­ய­ணத் துறை அமைச்­சர் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்­பட்ட அனைத்­து­லக எல்­லை­களை பகுதி பகு­தி­யா­கத் திறக்க ஆஸ்­தி­ரே­லியா தயா­ராகி வரு­வ­தா­க­வும் அதன் தொடக்­க­மாக கட்­டுப்­பாடு விலக்­கப்­பட்ட பய­ணத்­திற்­கான ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்டு உள்ளதாகவும் நேற்று அவர் கூறி­னார்.

நியூ செளத் வேல்ஸ், விக்­டோ­ரியா மற்­றும் தலை­ந­கர் கேன்­ப­ரா­வில் வசிக்­கும், முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஆஸ்­தி­ரே­லிய குடி­மக்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் இன்று முதல் அனைத்­து­லக அள­வி­லான பய­ணம் மேற்­கொள்­ள­லாம். அவர்­கள் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­குத் திரும்பி வரும்­போது தனித்­தி­ருக்க வேண்­டிய அவ­சி­யம் இனி இருக்­காது.

மேலும், அண்­டைய நியூ­சி­லாந்து மக்­களில் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்­கும் இந்­தக் கட்­டுப்­பாடு நீக்­கப்­பட்டு ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­குள் நுழைய இன்று முதல் அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள்.

"பொரு­ளி­யல் மீட்­சியை நோக்­கிய எங்­க­ளின் அடுத்­த­கட்ட நட­வ­டிக்கை இது," என சுற்­றுப்­ப­ய­ணத் துறை அமைச்­சர் டேன் டெஹான் தமது அறிக்­கை­யில் கூறியுள்ளார்.