சிபு: மலேசியாவின் சரவாக் மாநில துைண முதல்வர் ஜேம்ஸ் மாசிங் கொவிட்-19 தொற்று காரணமாக உயிரி
ழந்துவிட்டார் என 'த ஸ்டார்' இணையத்தளம் தெரிவித்தது. அவருக்கு வயது 72. செப்டம்பர் 28ஆம் தேதி பெட்ரா ஜெயாவிலுள்ள நோர்மா
சரவாக் மருத்துவ நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் நேற்றுக் காலை 7 மணியளவில் காலமான
தாகத் தெரிவிக்கப்பட்டது.
சரவாக்கின் பிஆர்எஸ் கட்சியின் தலைவருமான திரு மாசிங், இரு தடுப்பூசி
களையும் போட்டுக்கொண்டவர். தமக்கு காய்ச்சல், இருமல், பசியின்மை, நுரையீரலில் தண்ணீர் போன்ற கொவிட்-19 அறிகுறிகள் இருப்பதாக செப்டம்பர் 28ஆம் தேதி திரு மாசிங் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்றுக் காலை பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "திரு மாசிங்கின் மறைவு சரவாக் மாநிலத்துக்கும் நாட்டுக்கும் பேரிழப்பு. மக்களின் தலைவராக, தொலைநோக்கு சிந்தனையுடையவராக, கொள்கைவாதியாக அவர் விளங்கினார்," என கூறியுள்ளார். மாசிங்கின் தம்பி ஜன்தாய் மாசிங்கும் அவரது மனைவி யும் சில மாதங்களுக்கு முன கொவிட்-19 பாதிப்பால் உயிரிழந்துவிட்டனர்.