நீண்டகாலத்துக்குப் பின் தலிபான் தலைவர் நேரில் தோன்றினார்
காபூல்: தலிபான் அமைப்பின் உயர் மட்டத் தலைவர்களில் ஒருவரான ஹைபத்துல்லா அகுண்ட்ஸாடா (படம்) 2016ஆம் ஆண்டுக்குப் பின் சனிக்கிழமை முதல்முறையாக பொதுவெளியில் தோன்றினார்.
ஆப்கானிஸ்தானின் தென்
பகுதி நகரான கந்தகாரில் தமது ஆதரவாளர்களிடையே அவர் உரையாற்றியதாக தலிபானின் அதிகாரபூர்வத் தகவல் தெரிவித்தது. இஸ்லாமிய இயக்கத்தின் ஆன்மிகத் தலைவர் பொறுப்பை 2016ஆம் ஏற்றது முதல் அவர் தனித்து வாழ்ந்து வந்தார்.
ஆப்கானிஸ்தானின் ஆட்சிப் பொறுப்பை தலிபான் இயக்கம் கைப்பற்றிய பின்னரும் அவர் வெளியில் தோன்றவில்லை. ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் காபூலை முழுமையாகக் கைபற்றிய பின்னர் தலிபான் அரசாங்கம் அமைந்தபோது அகுண்ட்ஸாடாவைப் பற்றிய தகவல் எதுவும் வெளியாகாத நிலையில் அவர் மரணமடைந்துவிட்டதாக வதந்திகள் பரவின. இந்நிலையில் கந்தகாரில் உள்ள ஒரு சமயப்பள்ளிக்கு அவர் சனிக்கிழமை வருகையளித்ததாகவும் அங்கிருந்த படைத் தலைவர்களுடன் அவர் உரையாடியதாகவும் தலிபான் சமூக ஊடகக் கணக்குகளில் பரவிய குரல் பதிவு ஒன்று தெரிவித்தது. போரில் உயிர்த்தியாகம் செய்த தலிபான் வீரர்களுக்கும் காயமடைந்த வீரர்களுக்கும் அவர் வழிபாடு நடத்துவது அந்த பத்து நிமிட ஒலிப்பதிவில் பதிவாகி இருந்தது.
துரத்தி துரத்தி முட்டி ய எருது: ஸ்பெயின் திருவிழாவில் மரணம்
மட்ரிட்: ஸ்பெயினில் நடைபெற்ற எருது ஓட்ட திருவிழாவில் 55 வயது ஆடவர் ஒருவர் மாடு முட்டி மரணமடைந்தார். சனிக்கிழமை ஒன்டா என்னும் நகரில் இச்சம்பவம் நிகழ்ந் தது. கொவிட்-19 பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த எருது ஓட்ட திருவிழா, கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. அதன் பிறகு ஸ்பெயினில் மாடு முட்டி உயிரிழந்த முதல் சம்பவம் பதிவாகி உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. இறந்தவரைப் பற்றிய விவரங்களை ஒன்டா நகர மன்றம் வெளியிடவில்லை. திருவிழாவில் பங்கேற்ற எருது ஒன்று இவரைத் துரத்தி துரத்தி முட்டியதாகவும் இடது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியதாகவும் அச்செய்தி கூறியது. மேலும் தலையிலும் காயம் ஏற்பட்டிருந்ததால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அந்த ஆடவர் உயிரிழந்தார்.
மலேசியாவில் வேலையின்மை அதிகரித்தாலும் ஆள் பற்றாக்குறை
கோலாலம்பூர்: மலேசியாவில் வேலையின்மை விகிதம் அதிமாக இருந்தபோதிலும் சில முக்கிய துறைகளில் ஆள் பற்றாக்குறை நிலவுவதாகத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. அதற்குப் பல காரணங்கள் உள்ளதாகவும் குறிப்பாக வெளி நாட்டு ஊழியர்களின் ஒர்க் பெர்மிட் காலாவதி ஆவது, கொள்ளைநோய் காரணமாக வர்த்தகங்களை திறப்பதும் மூடுவதும் திரும்பத் திரும்ப நடைபெறுவது போன்றவை அவற்றில் முக்கியம் என்றும் மலேசியாவின் தேசிய வர்த்தக, தொழில் சபைத் தலைவர் லோ கியன் சுவான் அண்மையில் கூறினார். 2018ஆம் ஆண்டு 1.9 மில்லியனாக இருந்த வெளி நாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது 800,000 குறைந்து 1.1 மில்லியன் ஆகிவிட்டதாகவும் இது ஊழியரணி யில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

