ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகருக்குச் சென்ற பெண்மணி ஒருவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து டிஸ்னிலேண்ட் கேளிக்கை பூங்கா மூடப்பட்டது.
ரோலர் கோஸ்டர் ராட்டினம், மணற்கோட்டை என தங்கள் நேரத்தை மகிழ்ச்சியாக கழிப்பதற்காக கேளிக்கை பூங்காவில் மக்கள் காத்துக்கொண்டிருந்த நேரத்தில், அதிகாரிகள் மக்கள் வெளியே செல்ல முடியாதபடி பூங்காவின் கதவைப் பூட்டிவிட்டனர்.
மக்கள் வெளியே செல்வதற்கு முன் அவர்களுக்குக் கிருமித் தொற்று இல்லை என்பதை உறுதிப் படுத்துவதற்காக அவ்வாறு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
பூங்காவிற்குள் இருந்த 34,000 பேருக்கும் கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நேற்றுமுன்தினம் நள்ளிரவு வரை இந்த பரிசோதனை நீடித்ததாக பூங்கா அதிகாரிகள் சொன்னார்கள்.
அவர்களில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றாலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் அதன் பிறகு மீண்டும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஷாங்காய்க்குச் சென்ற பெண்மணி, டிஸ்னிலேண்ட் பூங்காவிற்குச் சென்றாரா என்பது குறித்து அதிகாரிகள் தொடர்பு தடமறிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருமித்தொற்றை வெற்றிக்
கரமாக களைந்த சீனா, அது மீண்டும் பெருமளவில் பரவாமல் இருக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.