தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்றது ஆஸ்திரேலியா

1 mins read
f5fdf92e-7977-4122-9bae-8300ab98a9f4
-

மெல்­பர்ன்: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் அனைத்­து­லக எல்லை கட்­டுப்­பா­டு

­கள் தளர்த்­தப்­பட்­ட­தைத் தொடர்ந்து சிட்னி விமான நிலை­யம் நேற்று வெளி­நாட்­டுப் பய­ணி­களை வர­வேற்­றது.

18 மாதங்­க­ளுக்­குப் பிறகு முதல்­மு­றை­யாக, லாஸ் ஏஞ்­சல்­ஸில் இருந்து சென்ற குவாண்­டாஸ் விமா­னம், சிட்னி விமா­ன­நி­லை­யத்­தில் நேற்று காலை 6 மணிக்­குத் தரை­யி­றங்­கி­யது. சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் விமா­னத்­தில் சென்ற வெளி­நாட்­டுப் பய­ணி­களும் நேற்று சிட்னி சென்­ற­னர்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பய­ணி­கள் தனி­மைப்­ப­டுத்­தல் இல்­லா­மல் ஆஸ்­தி­ரே­லி­யா­விற்­குப் பய­ணம் செய்­ய­லாம் என்று ஆஸ்­தி­ரே­லிய அர­சாங்­கம் அண்­மை­யில் அறி­வித்­தி­ருந்­தது.

ஆனால் முதற்­கட்­ட­மாக ஆஸ்­தி­ரே­லிய குடி­மக்­கள், நிரந்­த­ர­வா­சி­கள் மற்­றும் அவர்­க­ளின் குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு மட்­டுமே அனுமதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

விரைவில் வெளி­நாட்­டுச் சுற்­று­லாப் பய­ணி­கள், ஊழி­யர்­களை அனு­ம­திப்­பது குறித்­தும் ஆஸ்­தி­ரே­லியா திட்­ட­மிட்டு வரு­கிறது.

சிங்கப்பூர் குடிமக்கள் வரும் 21ஆம் தேதி முதல் தனிமைப்படுத்தல் இன்றி ஆஸ்திரேலியா செல்லலாம்.