சிட்னி: ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் ஹாங்காங் குடிமக்களுக்கு நிரந்தரவாச தகுதிக்கான புதிய விசாக்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது.
ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசாவில் தங்கியுள்ள 9,000 ஹாங்காங் குடிமக்கள் நிரந்தரவாச அனுமதி அட்டைக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த விசாவிற்கு ஹாங்காங், பிரிட்டன் ஆகிய இரண்டு நாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியும்.
ஹாங்காங் மீதான பிடியை இறுக்கும் வகையில் சீனா தேசிய பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்
படுத்தியதைக் கடுமையாக சாடி வந்த நிலையில் ஆஸ்திரேலியா இதனை அறிமுகப்படுத்துகிறது.
ஜூலை 2021 வரையிலான முந்திய 18 மாதங்களில் சுமார் 6,000 ஹாங்காங் குடிமக்களுக்கு ஆஸ்திரேலியா நிரந்தரவாச அனுமதி விசா அளித்துள்ளது.
மேலும் 9,250 பேர் அதற்காக விண்ணப்பித்து உள்ளதாக குடிநுழைவுத் துறை கூறியது.