காபூல் மருத்துவமனை குண்டுவெடிப்பில் 15 பேர் பலி

காபூல் மருத்துவமனை குண்டுவெடிப்பில் 15 பேர் பலி

1 mins read
a9f827c2-d1ee-472e-bce0-0414c6994b8a
-
Google News Preferred Icon

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் ஒரு பகுதியில் மருத்துவமனையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 15 பேர் மாண்டுவிட்டதாக தலிபான் அமைப்பு கூறியது.

மத்திய காபூலில் உள்ள 400 படுக்கைகள் கொண்ட சர்தார் முகமது தாவுத் கான் மருத்துவமனையின் நுழைவாயிலில் குண்டுவெடிப்பு நடந்ததாகவும் அந்தப் பகுதிக்கு பாதுகாப்புப் படையினர் அனுப்பப்பட்ட தாகவும் உள்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் காரி சயீத் கோஸ்டி தெரிவித்தார்.

இந்த குண்டுவெடிப்பில்

15 பேர் மாண்டனர். 34 பேர் காயமடைந்தனர்.

இத்தாலிய உதவிக் குழு நடத்தும் மருத்துவமனைக்குக் காயமடைந்த நிலையில் ஒன்பது பேர் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது.