ஊழியருக்கு தொற்று; பள்ளிக்குள் பூட்டப்பட்ட மாணவர்கள்

மெல்ல மெல்ல அதிகரிக்கும் கிருமிப் பரவல்; சீனா கடும் நடவடிக்கை

பெய்­ஜிங்: சீனா­வில் மூன்று மாதங்­களில் ஆக அதிக கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­ன­தைத் தொடர்ந்து, பெய்­ஜிங்­கில் கட்­டுப்­பா­டு­கள் மேலும் கடு­மை­யாக்­கப்­ப­டக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

நேற்று சீனா­வில் 93 புதிய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின. ஆகஸ்ட் 9ஆம் தேதிக்­குப் பிறகு பதி­வான ஆக அதி­க­மான எண்­ணிக்கை இது.

பெய்­ஜிங்­கில் ஜன­வரி 19ஆம் தேதிக்­குப் பிறகு நேற்று ஆக அதி­க­மாக எட்டு பேர் தொற்­றுக்கு ஆளா­கி­னர்.

சென்ற மாத பிற்­ப­கு­தி­யில் இருந்து சீனா­வில் ஒவ்­வொரு நாளும் கிரு­மிப் பர­வல் மெல்ல மெல்ல அதி­க­ரிக்­கத் தொடங்கி உள்­ளது.

பிற நாடு­க­ளோடு ஒப்­பி­டு­கை­யில் அந்த எண்­ணிக்கை குறை­வா­ன­தாக இருந்­தா­லும் கிரு­மித்­தொற்றை முற்­றி­லும் ஒழிக்­கும் கொள்­கையைக் கொண்­டி­ருக்­கும் சீனா, கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­

ப­டுத்த மிகக் கடு­மை­யான நட

வடிக்­கை­களை எடுத்து வரு­கி

றது.

அந்த வகை­யில், பள்ளி ஊழி­யர் ஒரு­வ­ருக்­குக் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து தொடக்­க­நிலை மாண­வர்­கள் பள்­ளிக்­கூ­டத்­திற்­குள்­ளேயே பூட்­டப் பட்­ட­தாக பிபிசி செய்தி கூறுகி

றது.

உட­ன­டி­யாக அவர்­க­ளுக்­குக் கிரு­மித்­தொற்­றுக்­கான பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டது. ஆனால் பரி­சோ­தனை முடிவு வரும் வரை வீட்­டிற்கு அனுப்­பப்­ப­டாத 7 முதல் 12 வய­துக்கு உட்­பட்ட அந்த மாண­வர்­கள், அன்­றி­ர­வைப் பள்ளிக் கூடத்­தி­லேயே கழித்­த­னர்.

பள்­ளிக்கு வெளியே காத்­துக்­கொண்­டி­ருந்த பெற்­றோர்­க­ளி­டம் குறிப்­பிட்ட சில மாண­வர்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட வேண்டியிருப்­ப­தாக பள்ளி தலை­மை­யா­சி­ரி­யர் சொன்னார்.

கிட்­டத்­தட்ட 35 மாண­வர்­கள் தனி­மைப்­ப­டுத்­த­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டிருக்கக்கூடும் என்று உள்­ளூர் தொலைக்­காட்சி தெரி­வித்­தது.

ஓரிரு நாட்­க­ளுக்கு முன்­னர் ‌ஷாங்­கா­யில் ஒருவருக்குக் கிருமித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தால், டிஸ்­னி­லேண்ட் கேளிக்கை பூங்­கா­விற்­குச் சென்ற அனை­வ­ரும் அங்­கேயே பூட்­டப்­பட்­ட­னர்.

பரி­சோ­தனை முடி­வு­க­ளுக்­குப் பிற­கு­தான் அவர்­கள் வீட்டிற்குச் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!