150,000 கைக்குழந்தைகளின் உயிரைப் பறிக்கும் கிருமி; தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வலியுறுத்து

1 mins read
e2f532a2-0af4-4250-9adc-c6fbb574be6f
-

ஜெனிவா: இறந்து பிறக்­கும் பிள்­ளை­கள் உட்­பட ஆண்­டு­தோ­றும் ஏறக்­கு­றைய 150,000 கைக்­கு­ழந்­தை­க­ளின் மர­ணத்­திற்­குக் கார­ண­மாக விளங்­கும் கிரு­மித்­தொற்­றுக்கு உட­ன­டி­யாக தடுப்பு மருந்து கண்­டு­பி­டிக்­கும்­படி உலக சுகா­தார நிறு­வ­னம் வலி­யு­றுத்தி இருக்­ கிறது.

'குரூப் பி ஸ்ட்­ரெப்­டோ­காக்­கஸ் (ஜிபி­எஸ்)' என்ற அந்­தக் கிரு­மி­யின் தாக்­கம், குறை­மா­தக் குழந்தை பிறப்­பிற்­கும் உடற்­கு­றை­பாட்­டிற்­கும், முன்­னர் நினைத்­த­தைக் காட்­டி­லும் பெரும் கார­ண­மாக விளங்­கு­வது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

உலக சுகா­தார நிறு­வ­ன­மும் லண்­டன் சுகா­தார, வெப்­ப­மண்­டல மருந்­துக் கல்­விக் கழ­கமும் வெளி­யிட்­டுள்ள புதிய அறிக்­கை­யில் இது குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஒவ்­வோர் ஆண்­டும் கிட்­டத்­தட்ட 100,000 கைக்­கு­ழந்­தை­க­ளின் இறப்­பிற்­கும் 50,000 குழந்­தை­கள் இறந்தே பிறப்­ப­தற்­கும் 'ஜிபி­எஸ்' கிரு­மியே கார­ணம் எனக் கண்­

ட­றி­யப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன், இக்­கி­ருமி ஆண்­டு­தோ­றும் 40,000 கைக்­கு­ழந்­தை­

க­ளி­டம் நரம்­பி­யல் பாதிப்­பை­யும் ஏற்­ப­டுத்தி வரு­வ­தாக அவ்­வ­றிக்கை ­யில் கூறப்­பட்­டுள்­ளது.

சரா­ச­ரி­யாக, ஒவ்­வோர் ஆண்­டும் உல­கம் முழு­வ­து­முள்ள கர்ப்­பி­ணி­களில் 15 விழுக்­காட்­டி­னர், அதா­வது கிட்­டத்­தட்ட 20 மில்­லி­யன் பேரின் பிறப்­பு­றுப்­பில் இந்த ஜிபி­எஸ் கிருமி இருப்­ப­தா­கச் சொல்லப்­ப­டு­கிறது.

பெரும்­பா­லோ­ரி­டம் அறி­கு­றி­கள் தெரி­யா­வி­டி­னும், மகப்­பேற்­றின்­போது கர்ப்­பி­ணி­க­ளி­டம் இருந்து இக்­கி­ருமி பிள்­ளை­க­ளுக்­கும் சென்று­வி­ட­லாம்.

சிகிச்சை பெறா­மல் விட்­டு­விட்­டால், மூளைச்­சவ்வு அழற்சி ஏற்­ப­ட­லாம் என்­றும் ரத்­தத்­தில் நச்­சுப்­பொ­ருள்­கள் கலந்­து­வி­ட­லாம் என்­றும், அது உயி­ருக்கே அச்­சு­றுத்­த­லாக முடிந்­து­வி­ட­லாம் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

'ஜிபி­எஸ்' பாக்­டீ­ரி­யம், பெரி­ய­வர்­களில் மூன்­றில் ஒரு பகு­தி­யி­ன­ரின் குடல் பகு­தி­களில் எந்த ஒரு பாதிப்­பை­யும் ஏற்­ப­டுத்­தா­மல் வாழ்ந்து வரு­வ­தாக மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.