மணிலா: பிலிப்பீன்ஸ் நாட்டில் 18 வயதுக்கு கீழுள்ள சிறுவர்
களுக்கு இந்தக் கொள்ளைநோய் காலம் முடக்கநிலை என்பது ஒரு தொடர்கதையாகியுள்ளது. அதற்குக் காரணம் அந்நாடு, மற்ற பல நாடுகளைப் போலல்லாது, சிறுவர்களை எளிதில் பாதிக்கப்படக்
கூடியவர்கள் என வகைப்படுத்தியுள்ளது.
ஆனால், 20 மாத முடக்க
நிலைக்குப் பின்னர் இனியும் தங்கள் பிள்ளைகளை வீட்டிலேயே பூட்டி வைத்திருந்தால் அவர்களின் மனநலம் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் அவர்களிடையே தோன்றியுள்ளது. இதனால், தங்கள் வீட்டுச் சிறுவர்கள் விளையாடி மகிழ்வதற்காக நூறாயிரக்கணக்கான பெற்றோர் பாதுகாப்பான சிறுவர் விளையாட்டுகளுக்கான இடங்களை தேட சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர்.
கிழக்கு மணிலா கடைத்தொகுதி ஒன்றில் இரண்டு வயது சிறுமி நன்தேனியா யசோபெல் அலெஸ்னா முதல்முறையாக, அவரது தாயார் ருத் ஃபிரான்சின் ஃபேலர் என்பவரின் மேற்பார்வையில், விளையாட்டு ஸ்கூட்டர், சைக்கிள் இவற்றை ஓட்டி மகிழ்ந்தார்.
பின்னர், தமது மகள் வியைாடும் அந்தக் கண்கொள்ளாக் காட்சியை சிறுமியின் தந்தை திரு ஃபேலர், சிறுவர்கள் விளையாடி, மகிழக்
கூடிய இடங்களைக் கண்டறிவதற்கு என்றே உருவாக்கப்பட்ட, ஃபேஸ்புக் பதிவில் பதிவேற்றினார்.
இதுபற்றிக் குறிப்பிடும் திரு ஃபேலர், "எனது மகளின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. அவள் தான் கண்டவற்றை ஆச்சரியத்தோடு பார்த்தது அந்தப் பால்வடியும் முகம்," என்று ராய்ட்டர்ஸ் செய்தியாளரிடம் கூறி அகமகிழ்ந்தார். பொது இடங்களில் சாதாரணமாக விளையாடுவதை உடற்பயிற்சி என வகைப்படுத்தி கடுமையான கட்டுப்பாடுகளிலிருந்து தப்பிக்க 'கிட்ஸ் ஆர் அலவுட்' என்ற ஃபேஸ்புக் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது.