லண்டன்: மலேசியாவின் 1எம்டிபி மோசடி தொடர்பில் அபு தாபியின் சுய ஆதிபத்திய நிதியத்தின் மீது வழக்கு தொடுக்க பிரிட்டிஷ் நீதிபதி ஒருவர் மலேசியாவுக்கு அனுமதியளித்துள்ளார்.
இதன் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான சமரசத் தீர்வு ஒன்று 2017ஆம் ஆண்டு பிரிட்டனில் ஏற்பட்டது.
அந்த சமரசத் தீர்வை எதிர்த்த மலேசிய அரசு, அபு தாபி அரசுக்கு சொந்தமான இன்டர்நேஷனல் பெட்ரோலிய நிறுவனமும் ஆபர் இன்வெஸ்ட்மண்ட்ஸ் நிறுவனமும் முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்குக்கு எதிரான மோசடிக் குற்றச்சாட்டுகள் பற்றி அறிந்திருந்தன என்று கூறியது.
இதைத் தொடர்ந்து மலேசிய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஆண்ட்ரு பார்க்கர் முழு அளவிலான வழக்கிற்கு அனுமதி அளித்து மலேசிய அரசின் மேல்முறையீட்டு மனுவை அனுமதித்தார். இது ஒரு அசாதாரணமான வழக்கு என்றார் அவர்.