இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசிக்கு மலேசியா அனுமதி

கோத்தா பாரு: இந்­தி­யா­வின் கோவேக்­சின் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்கொண்ட பய­ணி­கள் மலே­சி­யா­வுக்கு வர­லாம் என்று மலே­சிய சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் தெரி­வித்­துள்­ளார்.

இந்­தி­யா­வின் பாரத் பயோ­டெக் நிறு­வ­னம் தயா­ரித்­துள்ள கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ரான கோவோக்­சின் தடுப்­பூ­சியை அவ­ச­ர­கா­லத்­துக்­குப் பயன்­ப­டுத்த உலக சுகா­தார நிறு­வ­னம் அண்­மை­யில் ஒப்­பு­தல் வழங்­கி­யது.

அத­னைத் தொடர்ந்து ஆஸ்­தி­ரே­லியா உள்­ளிட்ட சில நாடு­கள் இந்­தத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பய­ணி­க­ளுக்கு அனு­மதி அளிப்­

ப­தா­கக் கூறி உள்­ளன.

இந்­நி­லை­யில், கிளந்­தானிலுள்ள ஒரு மருத்­துவமனைக்கு நேற்று முன்­தி­னம் வருகை அளித்த திரு கைரி, கோவேக்­சி­னுக்கு உலக சுகா­தார நிறு­வ­னம் ஒப்­பு­தல் வழங்­கி­ய­தற்­காக இந்­தி­யா­வுக்கு வாழ்த்­துத் தெரி­வித்­தார்.

செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், "இந்­தி­யத் தயா­ரிப்­புத் தடுப்­பூ­சியை மலே­சியா பயன்­ப­டுத்­தா­விட்­டா­லும் அந்­தத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­களை வர­வேற்­கும்," என்­றார்.

மலே­சி­யா­வி­டம் போது­மான அள­வுக்கு தடுப்­பூசி கைவ­சம் உள்­ள­தால் கோவேக்­சின் போன்ற வேறு தடுப்­பூ­சி­களை வாங்க வேண்­டிய அவ­சி­யம் எழ­வில்லை என்­றும் அவர் கூறி­னார்.

கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ராக கோவேக்­சின் தடுப்­பூசி 78 விழுக்­காடு தடுப்­பாற்­றல் கொண்­டது என பாரத் பயோ­டெக் ஏற்­கெ­னவே தெரி­வித்­தி­ருந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!