நாகேந்திரன் மரண தண்டனை: மலேசிய பிரதமர் கோரிக்கை

நாகேந்திரன் மரண தண்டனை: மலேசிய பிரதமர் கோரிக்கை

2 mins read
6d2ae375-e0d0-4eff-bd9c-b66cd5dd2eb1
-

கோலா­லம்­பூர்: போதைப்­பொ­ருள் கடத்­த­லுக்­காக சிங்­கப்­பூ­ரி­ல் இந்த வாரம் மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட இருக்­கும் மலே­சி­ய­ரின் வழக்­கில் பரிவு காட்­டு­மாறு சிங்­கப்­பூர் பிர­த­மரை மலே­சி­யப் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் கேட்­டுக்­கொண்­டுள்­ள­தாக பெர்­னாமா செய்­தியை மேற்­கோள் காட்டி 'த ஸ்டார்' இணை­யச் செய்தி தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக சிங்­கப்­பூர் பிர­த­மர் லீ சியன் லூங்­கிற்கு திரு. இஸ்­மா­யில் கடி­தம் எழுதி இருப்­ப­தாக அச்­செய்தி கூறி­யது.

நாகேந்­தி­ரன் கே. தர்­ம­லிங்­கம், 33, எனப்­படும் அந்த ஆட­வ­ரின் மரண தண்­டனை விவ­கா­ரம் அண்­மைய வாரங்­க­ளாக அனைத்­து­ல­கக் கவ­னத்தை ஈர்த்து வரு­கிறது.

அவர் அறி­வாற்­றல் குறை­பாடு உள்­ள­வர் என்­ப­தைக் கார­ணம் காட்டி மரண தண்­ட­னையை நிறுத்­து­மாறு மனித உரி­மைக் குழுக்­களும் மற்ற அமைப்­பு­களும் கோரிக்கை விடுத்து வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், நாகேந்­தி­ர­னின் மரண தண்­ட­னையை நிறுத்தி வைப்­ப­தில் சிங்­கப்­பூர் அர­சாங்­கம் கவ­னம் செலுத்­த­வும் அதி­ப­ருக்கு புதிய கருணை மனு அளிக்க வாய்ப்பு வழங்­க­வும் திரு இஸ்­மா­யில் கோரிக்கை விடுத்­தி­ருப்­ப­தாக பெர்­னாமா நேற்று தெரி­வித்­தது.

நாகேந்­தி­ரன் 42.72 கிராம் ஹெரா­யின் போதைப்­பொ­ரு­ளைக் கடத்தி வந்­த­தற்­காக 2009ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம் சிங்­கப்­பூர் அதி­கா­ரி­க­ளால் கைது செய்­யப்­பட்­டார்.

தமது தொடை­யில் போதைப் பொருளை பொட்­ட­ல­மா­கக் கட்டி மலே­சி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைந்­த­போது உட்­லண்ட்ஸ் சோத­னைச் சாவடி நிலை­யத்­தில் அவர் பிடி­பட்­டார்.

நாகேந்­தி­ர­னுக்கு 2010 நவம்­

ப­ரில் சிங்­கப்­பூர் உயர் நீதி­மன்­றம் மரண தண்­டனை விதித்­தது.

அதி­ப­ருக்கு அவர் அனுப்­பிய கருணை மனு 2020 ஜூனில் நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

அவருக்கு நாளை மறு­தி­னம் (நவம்­பர் 10) மரண தண்­ட­னை நிறை­வேற்ற நாள் குறிக்­கப்­பட்­டுள்­ளது.