உணவுப் பஞ்சம் அதிகரிப்பு

2 mins read
8b32cb2c-c6be-4518-86a3-6ff068c257cf
உணவுப் பஞ்சத்தால்ஏமனில் போதுமான ஊட்டச்சத்தின்றி வாடும் சுமார்ஒன்றரை வயதான குழந்தை. இக்குழந்தையின்உடல் எடை நான்கு கிலோகிராம்.படம்: ஏஎஃப்பி -

ரோம்: உல­கில் உண­வுப் பஞ்­சத்­தால் பாதிக்­கப்­பட்டுள்ளோரின் எண்­ணிக்கை பெரிய அள­வில் அதி­க­ரித்­துள்­ள­தாக ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­தின் உணவு அமைப்பு கூறி­யுள்­ளது. 43 நாடு­களில் உண­வுப் பஞ்­சத்­தால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை 42லிருந்து 45 மில்­லி­ய­னாக உயர்ந்திருப்பதாக அமைப்பு தெரி­வித்­தது.

குறிப்­பாக ஆப்­கா­னிஸ்­தா­னில் மேலும் மூன்று மில்­லி­யன் பேர் உண­வுப் பஞ்­சத்­திற்கு ஆளா­கி­இருப்­ப­தா­கத் தெரி­ய­வந்­தது. அதுவே பஞ்­சத்­தால் வாடு­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­பதற்கு முக்­கி­யக் கார­ணம் எனக் கூறப்­படு­கிறது.

பூசல்­கள், பரு­வ­நிலை மாற்­றம், கொவிட்-19 ஆகி­யவை உண­வுப் பஞ்­சத்­தால் தவிப்­போ­ரின் எண்­ணிக்­கையை உயர்த்தியிருப்பதாக 'டபள்யூ­எ­ஃப்பி' எனப்­படும் உலக உண­வுத் திட்­டத்­தின் நிர்­வாக இயக்கு­நர் டேவிட் பீஸ்லி குறிப்­பிட்­டார். இத­னால் 45 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோர் உண­வின்றி இருக்­கும் நிலையை நோக்­கிச் சென்­று­கொண்டி­ருப்­பதை ஆக அண்­மை­யில் வெளி­வந்­துள்ள தக­வல்­கள் காட்­டு­வ­தாக அவர் சொன்­னார்.

உல­கில் உண­வுப் பஞ்­சத்­தைப் போக்க சுமார் ஏழு பில்­லி­யன் டாலரைச் செல­வி­ட­வேண்­டி­யி­ருக்­கும் எனக் கணிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாண்டு தொடக்­கத்­தில் இத்­தொகை 6.6 பில்­லி­யன் டால­ரா­கக் கணிக்­கப்­பட்­டி­ருந்­தது. மேலும், உண­வுப் பஞ்­சத்­தைப் போக்க நடப்­பில் இருக்­கும் நிதி வழங்­கும் முறை­கள் சமா­ளிக்­க­முடியாத சவால்­களை எதிர்­நோக்கு­வ­தா­க­வும் உலக உண­வுத் திட்­டம் எச்­ச­ரித்­துள்­ளது.

மோச­மான உண­வுப் பற்­றாக்­குறை­யைச் சமா­ளிக்­கப் பிள்­ளை­களுக்கு இளம் வய­தி­லேயே திரு­மணம் செய்­து­வைப்­பது, அவர்­களின் பள்­ளிக் கல்­வியை நிறுத்து­வது போன்ற நட­வ­டிக்­கை­களை சில குடும்­பங்­களில் பெற்­றோர் எடுப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. எத்­தி­யோப்­பியா, ஹெய்ட்டி, சோமா­லியா, அங்­கோலா, கென்யா, புரூண்டி ஆகிய நாடு­க­ளி­லும் பெரும் பசிக்கு ஆளா­னோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ள­தாகத் தெரி­ய­வந்­துள்­ளதாக இத்தாலியின் தலைநகர் ரோமில் இயங்கும் ஐக்கிய நாட்டு நிறுவன உணவு அமைப்பு கூறியது.