பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் சாவ் ஃப்ராயா ஆற்றுக்கு அருகே இருக்கும் பல பகுதிகளில் நேற்று திடீர் வெள்ளம் ஏற்பட்டது. பலத்த மழை பொழிந்ததாலும் சாவ் ஃப்ராயா ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்தோடியதாலும் வெள்ளம் ஏற்பட்டது.
பேங்காக்கிலும் சமுட் ப்ராக்கான் மாநிலம் உள்ளிட்ட அதன் சுற்று வட்டாரங்கள் சிலவற்றிலும் வெள்ளம் ஏற்பட்டது. சில பகுதிகளில் மக்கள் படகுகளில் பயணம் செய்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்கள் பழுதாயின. சென்ற மாதமும், பலத்த மழையால் மத்திய, தாய்லாந்தின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது.