தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆயுள் சிறை: மேல்முறையீடு குறித்து ஆலோசனை

1 mins read
fa2eaa53-6cb0-444c-af65-c3731c8d3f37
-

வெல்­லிங்­டன்: தனது ஆயுள் காலத்­திற்­குச் சிறை­யில் இருக்­க­வேண்­டும் எனத் தீர்ப்­பளிக்­கப்­பட்ட, நியூ­சி­லாந்­தின் கிரைஸ்ட்சர்ச் நக­ரின் பள்­ளி­வாசல் ஒன்­றில் தாக்­கு­தல் நடத்­திய பிரென்­டன் டரான்ட் (படம்) தனது தண்­ட­னைக்கு எதி­ராக மேல்­மு­றை­யீடு செய்­வது குறித்து ஆலோ­சித்து வரு­வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இப்­ப­டிப்­பட்ட சிறைத் தண்­டனை நியூ­சி­லாந்­தில் யாருக்­கும் விதிக்­கப்­ப­ட­வில்லை.

'வைட் சுப்ரெமசிஸ்ட்' எனப்படும் வெள்­ளை இனத்தவருக்கு முன்­னு­ரிமை இருக்­கிறது என்­பதை நம்பு­வ­தா­கச் சொல்லும் 31 வயது டரான்ட், 2019ஆம் ஆண்­டில் பள்ளி­வா­சல் தாக்­கு­தலை நிகழ்த்­தி­னார்.

தன் மீது சுமத்­தப்­பட்­டி­ருந்த 51 கொலைக் குற்­றச்­சாட்­டு­கள், கொலை முயற்­சி­யில் ஈடு­பட்­ட­தாக 40 குற்­றச்­சாட்­டு­கள், ஒரு பயங்­க­ர­வா­தக் குற்­றச்­சாட்டு ஆகி­ய­வற்றை டரான்ட் சென்ற ஆண்டு ஒப்­புக்­கொண்­டார்.