கோலாம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமரும் தனது சகோதரருமான நஜிப் ரசாக், 1எம்டிபி ஊழலில் தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க முடியும் என்று தான் நம்புவதாக கூறியுள்ளார் முன்னாள் சிஐஎம்பி வங்கித் தலைமை நிர்வாகியும் தலைவருமான நஜிர் ரசாக்.
1970களில் நாட்டை வழிநடத்திய தங்களது தந்தை ரசாக் ஹுசைன் விட்டுச்சென்ற அமைப்பைத் தவறாகப் பயன்படுத்தியதால் பில்லியன்கணக்கான டாலர்கள் திருடப்பட்டதாக அவர் சொன் னார்.
திங்களன்று வெளியிடப்பட்ட தனது சுயசரிதையில், ஒப்பந்தங்கள், உரிமங்கள், உயர் பதவிகளை வழங்குவதில் ஒதுக்கீடுகளின் முறை இப்போது ஊழலில் சிக்கியுள்ளதாகக் கூறும் விமர்சனங்களை நசீர் எதிரொலிக்கிறார்.
தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், நஜிப் நிரபராதி என்று நினைக்கிறாரா அல்லது இறுதியில் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டாலும் தோல்விக்கு அவர் பொறுப்பேற்க வேண்டுமா என்பது குறித்து தனது கருத்து களை தெரிவிக்க நஜிர் மறுத்துவிட்டார்.