கட்டாய தடுப்பூசிக்கு எதிராக நியூசிலாந்தில் ஆர்ப்பாட்டம்

கட்டாய தடுப்பூசிக்கு எதிராக நியூசிலாந்தில் ஆர்ப்பாட்டம்

1 mins read
19531994-c3a4-4528-9f2f-68a65b7f5288
-
Google News Preferred Icon

நியூசிலாந்தில் கிட்டத்தட்ட

80 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தாலும், கொவிட்-19 தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது, முடக்கநிலை ஆகியவற்றுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் அமைதியான முறையில் தங்களது ஆர்ப்பாட்டத்தை நடத்தினாலும், நாடாளுமன்றத்திற்கு வெளியே அவர்கள் கூடியதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அப்போது அவர்கள், 'விடுதலை' என்று முழக்கமிட்டுக் கொண்டும் பதாகைகளை ஏந்திக்கொண்டும் சென்றனர். ஆக்லாந்தில் இன்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளது. பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் இன்று அங்கு செல்லும்போது ஆர்ப்பாட்டங்கள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படம்: ராய்ட்டர்ஸ்