பேனாகத்தி கொண்டு முதலையிடமிருந்து தப்பினார்

பேனாகத்தி கொண்டு முதலையிடமிருந்து தப்பினார்

1 mins read
59eb8c6b-55a1-4d01-9190-1c5f785667f9
-

பிரிஸ்­பென்: முத­லை­யின் வாய்க்­குள் சிக்­கிய ஒரு­வர் பேனா கத்­தி­யைப் பயன்­ப­டுத்தி உயிர்­தப்­பிய சம்­ப­வம் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் நடந்­துள்­ளது.

கெய்ர்ன்ஸ் நக­ரத்­திற்கு அருகே ஹோப் வேல் பகு­தி­யில் உள்ள ஆற்­றங்­க­ரை­யில் மீன்­

பி­டித்­துக் கொண்­டி­ருந்­த­போது, முதலை அவர் காலைக் கவ்­விக்­கொண்­டது.

முத­லை­யி­டம் இருந்து தப்­பிக்க அரு­கில் இருந்த மரக்­கி­ளையை அவர் பிடித்­துக்­கொண்­டார். ஆனா­லும் முதலை அவ­ரைத் தண்­ணீ­ருக்­குள் இழுத்­துச் சென்­று­விட்­டது.

அப்­போது தனது இடுப்­பு­வார்­பட்­டை­யில் வைத்­தி­ருந்த கத்­தியை எடுத்து, தான் விடு­படும் வரை, முத­லை­யின் தலை­யில் பல­முறை குத்­தி­னார். அதன் பிறகு கரை­யில் குதித்து உயிர் தப்­பி­னார். மருத்­து­வ­ம­னை­யில் ஒரு வார சிகிச்­சைக்­குப் பின் தற்­போது நல­மு­டன் உள்­ள­தாக சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் கூறினர்.

"அதிர்‌ஷ்டவசமாக நான்கு அடி முதலையிடம் இருந்து அவர் உயிர் தப்பியுள்ளார். கடும் போராட்டத்திற்குப் பிறகு, உயிர் பிழைப்பது அரிதான ஒன்று," என்று வனத்துறை அதிகாரிகள் கூறினார்.