'கொவிட்-19 தாக்கத்திலிருந்து மீள தடையற்ற வர்த்தகம் தேவை'

'கொவிட்-19 தாக்கத்திலிருந்து மீள தடையற்ற வர்த்தகம் தேவை'

1 mins read
4d7e7cc2-3677-4ad6-a7df-a6a7f5bb9bc6
-

வெலிங்­டன்: தடை­யற்ற வர்த்­த­கம், திறந்த பொரு­ளா­தா­ரம் ஆகி­யவை வட்­டா­ரத்தை கொவிட்-19 கிரு­மித்­தொற்­றின் தாக்­கத்­தி­லி­ருந்து மீட்­டெ­டுக்­கும் என்று ஏபெக் எனும் ஆசிய-பசி­பிக் பொரு­ளா­தார கூட்­ட­மைப்­பின் சந்­திப்­பில் கலந்­து­கொண்ட வர்த்­தக, வெளி­யு­றவு அமைச்­சர்­கள் ஒப்­புக்­கொண்­ட­னர்.

வரும் சனிக்­கி­ழ­மை­யன்று நடை­பெ­ற­வுள்ள ஏபெக் கூட்­டத்­தில், அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன், சீன அதி­பர் ஸி ஸின்­பிங் உட்­பட 21 நாடு­க­ளின் தலை­வர்­கள் கலந்து ­கொள்­ள­வுள்­ள­னர். இதற்கு முன்­ன­தாக அமைச்­சர்­க­ளுக்கு இடை­

யி­லான மெய்­நி­கர் சந்­திப்பு நேற்று நடை­பெற்­றது.

இச்­சந்­திப்பை வழி­ந­டத்­திய நியூ­சி­லாந்து வர்த்­தக அமைச்­சர் டேமி­யன், புதை­வள எரி­பொ­ரு­ளுக்கு வழங்­கப்­படும் மானி­யங்­களை நாடு­கள் தானாக முன்­வந்து குறைப்­பது, தடுப்­பூ­சி­கள், பிற தொற்று நோய்க்­கான மருத்­துவ பொருட்­கள் மீதான வரிகளை நீக்கு­வ­தற்­கான கடப்­பா­டு­கள் குறித்து பேசப்­பட்­ட­தாக சொன்­னார்.

தொற்­று­நோ­யால் ஏற்­பட்­டுள்ள சவால்­க­ளைக் களை­வ­தற்கு வர்த்­தக தடை­க­ளைத் தவிர்க்க வேண்­டி­ய­தன் அவ­சி­யம் பற்றி அனை­வ­ரும் உடன்­பாடு கண்டுள்ளதாகவும் அவர் சொன்­னார். தலை­வர்­கள் சந்­திக்­கும்­போது, எல்­லை­க­ளைத் திறப்­பது பற்­றி­யும் பேசப்­படும் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது. ஏபெக்­கின் உறுப்­பிய நாடு­கள், உலக மக்­கள்­தொ­கை­யில் கிட்­டத்­தட்ட 40 விழுக்­காட்டை கொண்­டுள்­ளது. உல­கில் அந்­நா­டு­க­ளின் பொரு­ளா­தா­ரம் 60 விழுக்­கா­டாக உள்­ளது.