‘மலேசியா ஆரோக்கியமற்ற நாடுகள் பட்டியலில் உள்ளது’

கோலா­லம்­பூர்: அதி­க­மா­னோர் இதய நோய், உடற்­ப­ரு­மன் ஆகி­ய­வற்­றால் பாதிக்­கப்­ப­டு­வ­தால் மலே­சியா ஆரோக்­கி­ய­மற்ற நாடாக கரு­தப்­ப­டு­வ­தாக அந்­நாட்­டின் சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் கூறி­னார்.

மலே­சி­யர்­க­ளி­டையே ஆரோக்­கி­யம் குறித்த விழப்­பு­ணர்வு குறை­வாக உள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார்.

தொலைக்­காட்சி நிகழ்ச்சி ஒன்­றில் கலந்­து­கொண்ட அவர், "உடல் பரு­மன், இதய நோய் போன்­ற­வற்­றில் முத­லி­டத்­தில் இருக்­கும் நாடு­களில் நாமும் ஒன்று. அத்­து­டன் கொவிட்-19 உயி­ரி­ழப்­புக்­கான முக்­கிய கார­ணங்­களில் ஒன்­றான, நாட்­பட்ட நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களும் அதி­கம்.

"மலே­சி­யா­வில், நான் உட்­பட, இரண்­டில் ஒரு­வர் உடற்­ப­ரு­ம­னால் பாதிக்­கப்­பட்­டுள்­ளார். நால்­வ­ரில் ஒரு­வர் உடல் ரீதி­யி­லான செயல்­பா­டு­களில் ஈடு­ப­டு­வ­தில்லை. 20 பேரில் ஒரு­வர் ஆரோக்­கி­ய­மான உண­வுப் பழக்­கத்­தைக் கொண்­டி­ருக்­க­வில்லை.

"அரை மில்­லி­யன் பேர் மன­அழுத்­தத்­தில் உள்ள­தாக புள்ளிவிவ­ரங்­கள் கூறு­கின்­றன," என்­றார்.

பழக்­க­வ­ழக்­கத்­தில் மாற்­றம், சுகா­தார பரி­சோ­தனை செய்து கொள்­வ­தற்­கான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வதே 'ஆரோக்­கிய மலே­சியா' திட்­டத்­தின் நோக்­க­மா­கும் என்று அவர் கூறி­னார்.

கொவிட்-19 நோயை நிரந்­தர நோயாக கையா­ளு­வ­தற்கு மலே­சி­யர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் 'ஆரோக்­கிய மலே­சியா' திட்­டம் நேற்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!