ஜோகூர் பாரு: சிங்கப்பூர் எல்லையையொட்டி இருக்கும் மலேசியாவின் ஜோகூர் பகுதி உணவக உரிமையாளர்கள், சிங்கப்பூர்-ஜோகூர் இடையில் நிலப் போக்குவரத்துக்கான தனிமைப்படுத்தல் இல்லாத பயண அறிவிப்பை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.
சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையிலான தனிமைப்
படுத்தல் இல்லாத பயணத்தை அவர்கள் வரவேற்றாலும் ஜோகூர் பொருளாதரத்தில் அது பெரும் மாற்றத்தைக் கொண்டு வராது என்று கருதுகிறார்கள்.
மூடப்படும் நிலைமையில் உள்ள வர்த்தகங்களை மீட்பதற்கு கூடிய விரைவில் தனிமைப்படுத்தல் இல்லாத பயணம் உதவும் என்றார் ஜோகூர் உணவக உரிமையாளரான திருவாட்டி டான்.
தனிப்பட்ட வாகனங்கள் அனு
மதிக்கப்படவில்லை என்றாலும் பொதுப் போக்குவரத்துக்காவது அனுமதி அளிக்கவேண்டும் என்கிறார் ஜோகூர் இந்திய முஸ்லிம் வர்த்தக சங்கத் தலைவர் ஹுசைன்.