சம்பளத்திற்கு ஆள் வைத்து, அறை வாங்கிய நிறுவனர்!

சம்பளத்திற்கு ஆள் வைத்து, அறை வாங்கிய நிறுவனர்!

1 mins read
3b95ee2b-54d8-4108-8ab9-26bd33860736
சம்பளம் கொடுத்து, பெண்ணை வேலைக்கு வைத்து, அறை வாங்கிய 'பாவ்லோக்' நிறுவனர் மணீஷ் சேத்தி. படம்: டுவிட்டர் -

ஒவ்வொரு முறை ஃபேஸ்புக்கைத் திறக்கும்போதும் தம்மை அறைய பெண் ஒருவரை வேலைக்கு வைத்துக்கொண்ட தலைமை நிர்வாக அதிகாரியின் செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.

இச்சம்பவம் நிகழ்ந்து பல ஆண்டுகளாகிவிட்டபோதும் 'டெஸ்லா' அது மீண்டும் டுவிட்டரில் பரவலாகி வருகிறது. அது 'டெஸ்லா', 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கின் கண்ணில்பட்டு, அவரும் இரண்டு உணர்வுருக்களைத் (emoji) தட்டிவிட, அது இன்னும் தீயாகப் பரவி வருகிறது.

அணியக்கூடிய கருவிகளைத் தயாரிக்கும் 'பாவ்லோக்' என்ற நிறுவனத்தைத் தொடங்கி, அதன் தலைமை நிர்வாகியாக இருந்து வருகிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் மணீஷ் சேத்தி.

இவர் கடந்த 2012ஆம் ஆண்டு தமது உற்பத்தித்திறனைப் பெருக்க விரும்பினார். அதற்காக, ஒரு பெண்ணையும் இவர் வேலைக்கு அமர்த்திக்கொண்டார்.

ஆனால், அப்பெண்ணின் பணி என்னவென்றால், வேலை செய்யும் நேரத்தில் திரு மணீஷ் ஃபேஸ்புக்கை திறந்தால், அவரது கன்னத்தில் அறைய வேண்டும் என்பதுதான்.

"ஒவ்வொரு முறை ஃபேஸ்புக்கைத் திறக்கும்போதும் என்னை அறைவதற்காக 'கிரெய்க்ஸ்லிஸ்ட்' வரி விளம்பரத்தளம் வழியாக ஒரு பெண்ணை வேலைக்கு எடுத்தேன்," என்று தமது வலைப்பதிவில் விவரித்திருந்தார் திரு மணீஷ்.

அவரது இந்தப் புதுமையான முயற்சியால் வியத்தகு பயன் விளைந்தது. அவரது உற்பத்தித்திறன் 98% கூடியது.

தமக்கு அறைவிட்ட காரா என்ற அப்பெண்ணுக்கு மணிக்கு எட்டு அமெரிக்க டாலர் ஊதியமாகத் தந்தார் திரு மணீஷ்.