சீனாவில் தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர சோதனை நடவடிக்கைகள்

2 mins read
c644a471-df13-4f8a-bbcb-25b4290a6d83
-

சீனா­வின் தலை­ந­கர் பெய்­ஜிங்­கில் கொவிட்-19 தொற்­றுக் குழு­மம் ஒன்று புதி­தாக அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளது. அந்­தக் குழு­மம் தொடர்­பு­டைய கிரு­மித்­தொற்று அதி­வே­க­மா­கப் பரவி பல­ரைத் தொற்றி வரு­கிறது.

பெய்­ஜிங்­கின் கொள்ளை நோய் கட்­டுப்­பாடு மற்­றும் தடுப்பு நிலை­யம் தொற்­றின் தட­ம­றி­த­லி­லும் கிரு­மிப்­ப­ர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தி­லும் இடர்­பா­டு­களை எதிர்­நோக்கி வரு­கிறது.

கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­படுத்த அதி­ரடி நட­வ­டிக்கை எடுப்­பது குறித்து, கொள்ளைநோய்க் கட்­டுப்­பாட்டு நிலை­யம் நேற்று அவ­ச­ரக் கூட்­டம் ஒன்றை கூட்­டி­யது. அந்­தக் கூட்­டத்­தில், படு­வே­கத்­தில் பர­வி­வ­ரும் தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு நுணுக்­க­மான அதே வேளை­யில் துரித நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட வேண்­டும் என்று முடிவு எடுக்­கப்­பட்­டது. அத­னை­ய­டுத்து பெய்­ஜிங், கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு, தொற்­றுச்­சோ­த­னையை முடுக்­கி­விட்­டுள்­ள­தோடு கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளை­யும் தீவி­ரப்­ப­டுத்தி வரு­கிறது.

பெய்­ஜிங்­கில் இதற்கு முன் ஒரு­முறை கிரு­மிப்­ப­ர­வல் அதி­க­ரித்­தது. அது மங்­கோ­லி­யா­வுக்­குச் சென்று வந்த ஒரு சுற்­று­லாப் பய­ணக் குழு­வி­ன­ரு­டன் தொடர்­பு­ப­டுத்­தப்­பட்­டது. ஆனால், இப்­போது ஏற்­பட்­டுள்ள கிரு­மிப்­ப­ர­வல், பெய்­ஜிங்­கில் நடை­பெற்ற ஒரு மாநாட்­டு­டன் தொடர்பு ­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

நேற்று முன்­தி­னம், சமூ­கத்­தில் ஆறு பேரை கிருமி தொற்­றி­யது. அவர்­களில் பெரும்­பா­லோர் 'பெட்­ரோ­சைனா கோ' என்­னும் நிறு­வ­னத்­தைச் சேர்ந்த ஊழி­யர்­கள் என்று கொள்ளை நோய்க் கட்­டுப்­பாடு மற்­றும் தடுப்பு நிலை­யத்­தின் துணை இயக்­கு­நர் பாங் ஸிங்­ஹுவோ நேற்று கூறி­னார்.

அந்த நிறு­வ­னத்­தைச் சேர்ந்த ஊழி­யர்­கள் கடந்த அக்­டோ­பர் 28 முதல் நவம்­பர் 10ஆம் தேதி, பெய்­ஜிங்­கில் உள்ள அதன் தலை­மை­ய­கத்­தில் நடந்த மாநாடு ஒன்­றில் கலந்­து­கொண்­ட­னர். அவர்­களில் ஜிலின் மாநி­லத்­தைச் சேர்ந்த ஒரு­வ­ருக்கு கிருமி தொற்­றி­யது மறு­நாள் உறு­தி­செய்­யப்­பட்­டது.

இதை­ய­டுத்து ஜிலின் மாகா­ணத்­தில் பெரிய அள­வி­லான கொவிட்-19 சோதனையை முடுக்­கி­விட்­ட­தாக பெய்­ஜிங் நக­ராட்சி மன்­றப் பேச்­சா­ளர் திரு ஸு ஜெஜி­யன், நேற்று நடந்த செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

மாநாட்­டுக்­குச்­ சென்று வந்த ஹைடி­யன் மாநி­லத்­தைச் சேர்ந்த ஒரு பெண்­ணுக்­கும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்­கும் கிரு­மித்­தொற்று இருப்­பது உறு­தி­செய்­யப்­பட்­டது.

அதை­ய­டுத்து அவ்­விரு மாநி­லங்­க­ளி­லும் பாதிக்­கப்­பட்­டோர் வசிக்­கும் இடங்­களில் பெரிய அள­வி­லான சோத­னையை முடுக்­கி­விட்­டுள்­ள­தாக திரு ஸு, தெரி­வித்­தார்.

இத­னை­ய­டுத்து பெட்­ரோ­சைனா நிறு­வ­னத்­தின் தலை­மை­ய­கம் மற்­றும் அதன் கிளை நிறு­வ­னங்­க­ளி­லும் சோதனை முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளது. நேற்று நண்­ப­கல் வரை­யில் நடந்த சோத­னை­யில் யாருக்கும் தொற்­றுப் பாதிப்பு இல்லை எனக் கூறப்­ப­டு­கிறது. இந்­தச் சம்­ப­வத்­தை­ய­டுத்து பெய்­ஜிங் நக­ரில் நடை­பெ­றும் மாநா­டு­கள், கூட்­டங்­கள் யாவும் மெய்­நி­கர் வாயி­லா­கவே நட­த்தப்­பட வேண்­டும் என்று பெய்­ஜிங் நக­ர­மன்­றம் அறி­வித்­துள்­ளது.

சீனா­வின் டாலி­யன் துறை­மு­கப் ­ப­கு­தி­யில் அடை­யா­ளம் காணப்­பட்ட தொற்­றுக்­கு­ழு­மம் தொடர்­பு­டைய கிருமி அதி­க­மா­கப் பரவி வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அங்கு நேற்று முன்­தின நில­வ­ரப்­படி 52 சமூ­கத் தொற்று அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளது.

பெரிய அள­வில் தொடங்­கப்­பட்­டுள்ள கொவிட்-19 சோதனை நட­வ­டிக்­கை­யில் ஏரா­ள­மான தொண்­டூ­ழி­யர்­கள் உதவி வரு­கின்­ற­னர். கடுங்­கு­ளி­ரை­யும் பொருட்­ப­டுத்­தா­மல் மக்­கள் இந்த சோதனை நட­வ­டிக்­கைக்கு ஆத­ரவு கொடுப்­ப­தாக கூறப்படுகிறது.