தடுப்பூசி போடாதோர்க்கு முடக்கநிலை அறிவிக்க ஆஸ்திரியா திட்டம்

தடுப்பூசி போடாதோர்க்கு முடக்கநிலை அறிவிக்க ஆஸ்திரியா திட்டம்

1 mins read
4a7e6048-125b-455e-ad16-755372628527
-

வியன்னா: முழு­மை­யாக கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோர்க்கு ஆஸ்­தி­ரியா இன்­னும் சில நாள்­க­ளுக்­குள் முடக்­க­நிலையை அறி­விக்க இருப்­ப­தாக 'பிபிசி' செய்தி தெரி­விக்­கிறது.

ஐரோப்­பிய நாடான ஆஸ்­தி­ரி­யா­வில், இதற்­கு­முன் இல்­லா­த­வாறு கடந்த 24 மணி நேரத்­தில் 11,975 பேர்க்கு கொரோனா தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த அச்­சு­றுத்­த­லைத் தீவி­ர­மாக எடுத்­துக்­கொள்ள வேண்­டும் என்று ஆஸ்­தி­ரிய கொரோனா கிருமி ஆணை­யம் எச்­ச­ரித்­துள்­ளது. இத­னை­ய­டுத்து, தடுப்­பூசி போடா­தோர்க்­குத் தேசிய அள­வில் முடக்­க­நி­லையை நடை­முறைப்­ப­டுத்­து­வ­தைத் தவிர்க்க முடி­யாது என்று அந்­நாட்­டின் பிர­த­மர் அலெக்­சாண்­டர் ஷாலன்­பெர்க் தெரி­வித்­துள்­ளார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள தயங்­கு­வோ­ரால் நாட்டு மக்­களில் மூன்­றில் இரு பகு­தி­யி­னர் பாதிக்­கப்­ப­டக்­கூ­டாது என்­றார் அவர்.

ஜெர்­ம­னி­யை­யும் செக் குடி­ய­ர­சை­யும் ஒட்­டி­யுள்ள அப்­பர் ஆஸ்­தி­ரி­யா­வில் 1.5 மில்­லி­யன் பேர் வசிக்­கின்­ற­னர். ஆஸ்­தி­ரி­யா­வி­லேயே அங்­கு­தான் கொவிட்-19 பர­வல் விகி­தம் அதி­கம். அதே­வே­ளை­யில், அங்­கு­தான் தடுப்­பூசி போடு­வ­தும் குறை­வாக உள்­ளது.

ஆஸ்­தி­ரி­யா­வில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோர், உண­வ­கங்­கள், கேளிக்கை அரங்குகள், முடி­திருத்­த­கங்­கள் போன்ற இடங்­க­ளுக்­குச் செல்ல ஏற்­கெனவே தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில், தடுப்­பூசி போடா­தோர்க்கு மட்­டும் முடக்­க­நி­லையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது அவ்­வ­ளவு எளி­தா­ன­தாக இராது என்று பலர் கருத்­து­ரைத்­துள்­ள­னர்.