தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மரமேறும் மலைப்பாம்பு! மலைக்க வைக்கும் உத்தி!

1 mins read
693059de-1128-4c70-b486-5edac39ff2d8
-

மலைப்பாம்பு ஒன்று மரமேறும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது.

நீளமான அந்தப் பாம்பு, மரமேறக் கையாளும் உத்தி காண்போரின் மனத்தை மயக்கும் விதத்தில் உள்ளது.

இந்தக் காணொளி ஐந்தாண்டுகளுக்குமுன் தென்கிழக்காசியாவில் எங்கோ ஓர் இடத்தில் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

View post on Instagram
 

உடலில் வலை போன்ற வடிவமைப்பைக் கொண்ட இந்த 'ரெட்டிகுலேட்டட்' வகை மலைப்பாம்பு, தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவில் காணப்படும்.

உலகின் ஆக நீளமான பாம்பாகக் கூறப்படும் இது, ஆக அபாயகரமான பாம்பினங்களில் சேர்ந்தது.

இது 1.5 மீட்டர் முதல் 6.5 மீட்டர் நீளம்வரை வளரக்கூடியது. அதிகபட்சம் 75 கிலோ எடையுடன் இருக்கும்.

இவ்வளவு நீளத்துடனும் எடையுடனும் இருக்கும் ஒரு பாம்பு, மரத்திலோ சுவரிலோ ஏறுவது மிகக் கடினமாக இருக்கும் எனப் பொதுவாகச் சொல்வதுண்டு.

ஆனாலும், இந்தக் காணொளியில் தோன்றும் பாம்பு, தனது உடலைச் சுருட்டி, தலையைத் தூக்கி, இலாவகமாக மரம் ஏறுவதைப் பார்க்கும்போது வியப்பு மேலிடுவது உறுதி!