அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா

அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா

2 mins read
35e4a388-d384-469b-9af3-91a3e54caaef
-

பெய்­ஜிங்: தைவா­னின் சுதந்­திரத்தை அங்­கீ­க­ரிக்­கும் முயற்­சி­களை எடுப்­போ­ருக்கு ஆத­ரவு தர­வேண்­டாம் என்று சீனா, அமெரிக்­காவை எச்­ச­ரித்­துள்­ளது. "தைவான் நீரி­ணை­யில் அமெரிக்கா உண்­மை­யி­லேயே அமைதி காக்க எண்­ணி­னால், அது தைவா­னின் சுதந்­தி­ரத்தை அங்­கீ­க­ரிக்­கும் நட­வடிக்­கை­களை திட்­ட­வட்­ட­மாக எதிர்க்­க­வேண்­டும்," எனச் சீன வெளி­யு­றவு அமைச்சர் வாங் யீ அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் ஆன்டனி பிளிங்­க­னி­டம் கூறி­னார்.

கடந்த சில மாதங்­க­ளாக அமெரிக்­கா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடையே பதற்றநிலை அதி­க­ரித்து வந்­துள்­ளது. சுமார் ஓராண்­டாக சீனா­வின் ஆகா­யப்படை தனது எல்லைக்கு அருகே பயிற்­சி­களை நடத்­தி­வ­ரு­வ­தாக தைவான் குறைகூறி­வ­ரு­வது இதற்­குக் கார­ணம்.

தைவான், சொந்த அர­சாங்­கத்­து­டன் இயங்­கும் தீவு. அது சீனா­வுக்­குச் சொந்­த­மான பகுதி என்­பது பெய்­ஜிங்­கின் வாதம். தைவா­னைப் பாது­காக்க அமெ­ரிக்கா நட­வடிக்கை எடுத்­தால் அத­னு­டன் தனது நாடு கூட்டு சேரா­மல் இருப்­பது நினைத்­துப் பார்க்­க­மு­டி­யாத ஒன்று என ஆஸ்­தி­ரே­லி­யத் தற்­காப்பு அமைச்­சர் பீட்­டர் டட்­டன் கூறி­யிருந்­தார்.

எரி­சக்­தியை ஆக்­க­பூர்­வ­மா­கப் பயன்­ப­டுத்­து­வது, பரு­வ­நிலை மாற்­றம் உள்­ளிட்ட விவ­கா­ரங்­கள் குறித்­தும் திரு வாங்கும் திரு பிளிங்கனும் தங்­க­ளின் கருத்­து­க­ளைப் பரி­மா­றிக்­கொண்­ட­னர். வரும் திங்­கட்­கி­ழ­மை­யன்று இரு நாட்டு அதிபர்­களான ஜோ பைட­னும் சீ ஜின்­பிங்­கும் மெய்­நி­க­ரா­கச் சந்­திக்­க­வி­ருக்­கின்­ற­னர். அது குறித்­தும் இரு­வ­ரும் பேசி­னர்.

இதற்­கி­டையே, தனது நாட்­டின் தெற்­குப் பகு­தி­யில் அமைந்­துள்ள சிறு தீவு­கள் உட்­பட தன்­னைப் பாது­காக்க அமெ­ரிக்கா காண்­பித்து­வ­ரும் அக்­க­றை­யில் எவ்­வித மாற்­ற­மும் இல்லை எனத் திரு பிளிங்­கன் தொலை­பே­சி­வழி தனக்கு உறு­தி­ய­ளித்­த­தாக ஜப்­பானின் புதிய வெளி­யு­றவு அமைச்­சர் யோஷி­மாசா ஹயாஷி கூறி­யுள்­ளார். தெற்­குச் சீனக் கட­லில் அமைந்­துள்ள சர்ச்­சைக்­கு­ரிய அத்­தீ­வு­க­ளின் தொடர்­பில் ஜப்­பா­னுக்­கும் சீனா­வுக்­கும் இடை­யி­லான உறவு கசப்­ப­டைந்­துள்­ளது.