கோலாலம்பூர்: தொடர்ந்து முகக் கவசங்களை அணியுமாறும் கூட்டமான இடங்களைத் தவிர்க்குமாறும் மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் அந்நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். மலேசியாவில் கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அவர் டுவிட்டர் வாயிலாக அறிவுரை வழங்கினார்.
குறிப்பாக மூத்த குடிமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவேண்டும் எனத் திரு கைரி குறிப்பிட்டார்.