மணிலா: எதிர்பாரா திருப்பமாக பிலிப்பீன்சில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள துணை அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரொட்ரிகோ டுட்டர்டேயின் மகளான சாரா டுட்டர்டே-கார்ப்பியோ போட்டியிடவிருக்கிறார். தேர்தலில் போட்டியிட 43 வயது திருவாட்டி சாரா தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளார்.
பிலிப்பீன்ஸ் அதிபர் தேர்தலில் குத்துச்சண்டை வீரர் மானி பக்கியாவ் போட்டியிடுவார்.

