மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஆஸ்திரேலிய இந்திய சமூக நிலையத்தின் திறப்பு விழாவின்போது அதன் வளாகத்தில் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்த மகாத்மா காந்தியின் சிலையும் திறந்துவைக்கப்பட்டது. ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் இச்சிலையைத் திறந்துவைத்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு இந்தியாவுடனான இருதரப்பு உறவைப் பற்றித் திரு மோரிசன் பெருமையாகப் பேசினார். ஆஸ்திரேலியாவில் காந்தியின் சிலையை உருவாக்கிய இந்திய சமூகத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

