ஒன்றுகூடல்களுக்குத் தடை இருந்தும் வாக்கு வேட்டை மும்முரம்

ஒன்றுகூடல்களுக்குத் தடை இருந்தும் வாக்கு வேட்டை மும்முரம்

2 mins read
48cb563d-1051-4454-b565-24bd5388c076
மலாக்கா உணவு நிலையம் ஒன்றில் உள்ளூர்வாசிகளுடன் மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப். படம்: பெர்னாமா -

மலாக்கா: மலாக்கா மாநி­லத் தேர்­த­லுக்­கான வாக்­க­ளிப்பு தினத்­துக்கு இன்­னும் சில நாட்­களே உள்­ளன. இந்­நி­லை­யில் அர­சி­யல் ஜாம்­ப­வான்­க­ளைக் கொண்ட இரு தரப்­பு­களும் தங்­க­ளின் பிர­சா­ரங்­களில் மும்­மு­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­றன. தேர்­தல் தொடர்­பான ஒன்­று­கூ­டல்­க­ளுக்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லும் மாநில மக்­களை வெவ்­வேறு நிகழ்­வு­கள் மூலம் கட்­சித் தலை­வர்­கள் துடிப்­பு­டன் சந்­தித்து வரு­கின்­ற­னர்.

அர­சி­யல் பிர­சா­ரங்­கள், நடைப்­ ப­ய­ணங்­கள், பொது­மக்­க­ளுக்கு நேர­டி­யா­கத் துண்­டுப் பிர­சு­ரங்­கள் விநி­யோ­கம் போன்­ற­வற்­றுக்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதத்­தில் நடந்த சாபா மாநி­லத் தேர்­த­லுக்­குப் பிறகு கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­களில் ஏற்­பட்ட அதி­க­ரிப்பு மீண்­டும் ஏற்­ப­டா­த­தைத் தடுக்க மலாக்கா தேர்­த­லுக்கு இந்­நடை­மு­றை­கள் அறி­விக்­கப்­பட்­டன.

போலிஸ் அனு­ம­தி­யு­டன் குறிப்­பிட்ட நேரத்­தில் வாக­னங்­க­ளி­லி­ருந்து ஒலி­பெ­ருக்கி வழி பிர­சா­ரம் செய்­வ­தற்கு மட்­டுமே அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இருப்­பி­னும், மலாக்­கா­வுக்கு அர­சி­யல் தலை­வர்­கள் படை­யெ­டுத்­துச் செல்­வதை இத்­த­டை­கள் தவிர்க்­க­வில்லை.

முன்­னாள் பிர­த­மர்­கள் நஜிப் ரசாக் மற்­றும் முகை­தீன் யாசின், பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணி­யின் தலை­வர் அன்­வார் இப்­ரா­ஹிம் ஆகி­யோர் மலாக்கா மக்­க­ளைச் சந்­திப்­ப­தற்­காக மாநி­லத்தை வலம் வரு­வ­தா­கக் கூறப்­பட்­டது.

மலே­சி­யா­வின் முன்­னாள் பிர­த­மர்­கள் என்ற நிலை­யில் நஜிப், திரு முகை­தீன் இரு­வ­ரின் பிர­சா­ரத்­தை­யும் அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் அணுக்­க­மா­கக் கவ­னித்து வரு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே, மலே­சிய பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் மலாக்­கா­வில் கலந்­து­கொண்ட நிகழ்வு தொடர்­பில், ஏற்­பாட்­டா­ள­ருக்கு 20,000 ரிங்­கிட் (S$6,500) அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

உணவு நிலை­யம் ஒன்­றில் கூடி­ய­வர்­க­ளி­டையே சமூக இடை­வெ­ளியை உறு­திப்­ப­டுத்த தவ­றி­ய­தால், ஏற்­பாட்­டா­ள­ரான பாரி­சான் நேஷ­னல் கூட்­ட­ணி­யின் வாக்­களிப்பு நிலை­யத் தலை­வ­ருக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. உணவு நிலை­யத்­தில் திரு இஸ்­மா­யிலை வர­வேற்க 60 ஆத­ர­வா­ளர்­கள் திரண்­டி­ருந்­த­னர்.