ஆஸ்திரேலிய சிறாருக்கு ஜனவரியில் தடுப்பூசி சாத்தியம்

ஆஸ்திரேலிய சிறாருக்கு ஜனவரியில் தடுப்பூசி சாத்தியம்

1 mins read
279f96ce-8a6d-4b47-810d-904e32bf3d15
-

மெல்­பர்ன்: கொவிட்-19க்கு எதி­ரா­கத் தடுப்­பூசி போடும் பணி­க­ளைத் தீவி­ர­மாக மேற்­கொண்டு வரும் நாடு­களில் ஆஸ்­தி­ரே­லி­யா­வும் ஒன்று. இந்­நி­லை­யில், ஜன­வ­ரி­யில் 12 வய­துக்­கும் குறைந்த சிறா­ருக்­குத் தடுப்­பூசி போடுவது தொடங்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

தடுப்­பூ­சியை 5 வய­துக்­கும் 11 வய­துக்­கும் இடைப்­பட்ட சிறா­ருக்­குப் போடு­வது குறித்த சுகா­தார, பாது­காப்­புத் தர­வு­களை மருத்­துவ அதி­கா­ரி­கள் மறு­ஆய்வு செய்து வரு­வ­தாக சுகா­தார அமைச்­சர் கிரெக் ஹன்ட் கூறி­னார். இத­னால் இப்­பி­ரி­வி­ன­ருக்­குத் தடுப்­பூசி போடு­வது தொடர்­பில் இவ்­வாண்­டில் முடி­வெ­டுப்­பது சற்று சிர­மமே என்­றார்.

"12 வய­துக்­கும் குறைந்த சிறா­ருக்­குத் தடுப்­பூசி போடு­வதை ஜன­வரி முற்­பா­தி­யில் எதிர்­பார்க்­கலாம். இருப்­பி­னும், இது தொடர்­பில் துரி­த­மா­கச் செயல்­பட்டு வரு­கி­றார்­கள்," என்று திரு ஹன்ட் குறிப்­பிட்­டார். 'ஃபைசர்-பயோ­என்­டெக்' தடுப்­பூ­சியை 5 வய­துக்­கும் 11 வய­துக்­கும் இடைப்­பட்ட சிறா­ருக்­குப் போட­லாம் என்று அமெரிக்­கா­வின் நோய் கட்­டுப்­பாட்டு, தடுப்பு நிலை­யம் இம்­மா­தம் பரிந்­துரை செய்­தி­ருந்­தது.

இந்­நி­லை­யில், கைக்­கு­ழந்­தை­கள் உட்­பட அனை­வ­ருக்­கும் தேவை­யான அளவு தடுப்­பூ­சி­களை­யும் பூஸ்ட்­டர் தடுப்­பூ­சி­க­ளை­யும் ஆஸ்­தி­ரே­லியா கைய­கப்­ப­டுத்­தி­விட்­ட­தாக அந்­நாட்டு கொவிட்-19 பணிக்­கு­ழு­வின் தலை­வர் ராணுவ லெப்­டி­னண்ட் ஜென­ரல் ஜான் ஃபிருவன் கூறி­னார்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் 16 வயது மற்­றும் அதற்­கும் மேற்­பட்ட வய­தி­ன­ருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்ள விகி­தம், வெள்­ளிக்­கி­ழமை நில­வ­ரப்­படி 90 விழுக்­காட்­டில் பதி­வா­னது. 83 விழுக்­காட்­டி­ன­ருக்கு இரு தடுப்­பூ­சி­களும் போடப்­பட்­டு­விட்­டன. 12 வய­துக்­கும் 15 வய­துக்­கும் இடைப்­பட்ட சிறா­ரில் 57.7 விழுக்­காட்­டி­ன­ருக்கு கொவிட்-19 தடுப்­பூசி போடப்­பட்­டு­விட்­ட­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.