நெப்ராஸ்கா: அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாநிலத்தில் உள்ள லிங்கன் விலங்கியல் பூங்காவில் மூன்று பனிச்சிறுத்தைகளுக்கு கொவிட்-19 தொற்று இருப்பதாக ஒரு மாதம் முன்னர் உறுதிசெய்யப்பட்டது. விலங்குகளின் உடல்நலம் தேற, அங்குள்ள பணியாளர்கள் எவ்வளவோ முயன்றும் அவை உயிரிழந்துவிட்டதாக ஃபேஸ்புக் மூலம் தெரிவிக்கப்பட்டது.
விலங்கியல் பூங்காவில் பனிச்சிறுத்தைகளுடன் இரு சுமத்திர புலிகளுக்கும் தொற்று உள்ளதாக கடந்த மாதம் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் அவ்விரண்டும் தேறி வருவதாக அண்மைய அறிக்கை ஒன்றில் விலங்கியல் பூங்கா குறிப்பிட்டது.

