நெகிரி செம்பிலான்: மலேசியாவின் நெகிரி செம்பிலானின் மன்டின் பகுதியில் நேற்று காலை மூண்ட தீயில் நான்கு வீடுகள் எரிந்து சாம்பலாகின.
அத்துடன் ஆறு பூனைகள், ஒரு நாய் ஆகியவையும் தீக்கு இரையாகின. தப்பிக்க முடியாமல் பிராணிகள் புகையைச் சுவாசித்து மாண்டதாக நம்பப்படுகிறது.
தம் வீட்டுக் கூடத்தில் இளைப்பாறிக்கொண்டிருந்த என்.விஜயா, 52, புகை நாற்றத்தால் எழுந்ததாகவும் தீ வெகுவிரைவாகப் பரவியதைப் பார்த்ததாகவும் கூறினார்.
உடனே தம் இரு பிள்ளைகளுக்கும் தெரிவித்தார். பிள்ளைகளில் ஒருவருக்குக் காலும் முறிந்திருந்தது. பணப்பையைத் தவிர வேறு எதையும் அவர்கள் எடுக்க முடியவில்லை என்று விஜயா தெரிவித்தார். யாரும் இல்லாத அண்டை வீட்டில் நெருப்பு மூண்டதாகக் கூறப்படுகிறது.

