உணவங்காடிக் கடைகளிலும் ஐந்து பேர் சேர்ந்து உண்ண அனுமதி

உணவங்காடிக் கடைகளிலும் ஐந்து பேர் சேர்ந்து உண்ண அனுமதி

1 mins read
155059ee-8839-407d-bb89-5fbbee979e74
முதலில் சில உணவங்காடி நிலையங்களில் இம்மாதம் முடிவதற்கு முன்பாகவே இத்தகைய நுழைவுக் கட்டுப்பாடுகளும் சோதனை முறைகளும் நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரே குடும்பத்த்தைச் சேர்ந்த ஐந்து பேர் வரை சேர்ந்து உணவகங்களில் சாப்பிட இப்போது அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஏற்பாடு, நவம்பர் மாத இறுதியில் இருந்து உணவங்காடிக் கடைகளுக்கும் காப்பிக்கடைகளுக்கும் நீட்டிக்கப்படும்.

உணவங்காடிக் கடைகளிலும் காப்பிக்கடைகளிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் போடாதவர்களுக்கும் வேறுபட்ட நடைமுறையை அமல்படுத்துவதன் தொடர்பில் அந்தக் கடைக்காரர்களுடன் தான் செயல்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு இன்று (நவம்பர் 15) தெரிவித்தது.

அங்கு செல்பவர்கள் 'சேஃப் என்ட்ரி' மூலம் உள்ளே செல்ல வேண்டும். முதலில் சில உணவங்காடி நிலையங்களில் இம்மாதம் முடிவதற்கு முன்பாகவே இத்தகைய நுழைவுக் கட்டுப்பாடுகளும் சோதனை முறைகளும் நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்